நீர் இன்றி அமையாது உலகு!

               அகர முதல எழுத்தெல்லாம் சரி வர பாடி, குறளின் குரலாய் விளங்கும் திருவள்ளுவர் உதிர்த்தச் சொற்கள் இவை.கொஞ்சம் அந்த தொடரின் பொருள் குறித்து சிந்தியுங்கள்.        உலகம் என்னும் எந்திரம் உயிராட நடமாட , அப்புவியில் உள்ள உயிர்கள் உயிர் வாழத்தேவை, நீர்.சுருக்கமாகச் சொன்னால், எந்திரத்திற்கு எரிபொருள் போலே , புவிக்கு நீர்.நீர் இல்லாத உலகம் என்பது அன்பு இல்லாத வாழ்க்கையை போலவே,நினைத்துக் கூட பார்க்க முடியாது.[…]

கல்வி முறை கண்ட மாற்றங்கள் , அதன் விளைவுகள்

ஒரு நாட்டை அழிக்க வேண்டுமென்றால் அதன் அடையாளம் , மொழி ஆகியவற்றை அழித்தால் தான் இது சாத்தியம். இது யாவரும் அறிந்ததே. ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னர், இந்திய நாடு பல வகைகளில் செல்வம் மிகுந்த பூமியாகவே இருந்தது. அவரவர் அவரவரது தொழில்களைச் செய்து இன்புற்று வாழ்ந்தனர். பல அபூர்வ ஒளி வீசும் கற்கள் அரசர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தன. விவசாயம் நன்றாக நடைபெற்று வந்தது. வாஸ்கோ டா காமா முதன் முதலாக இந்தியாவிற்கு ஐரோப்பாவிலிருந்து கி.பி . 1498 ஆம்[…]

மனித மனம் எனும் அற்புதம்

மனதின் விருப்பங்கள் பல அதில் நிறைவேறுவன சில ஆற்றலின் ஊற்று எது ஆர்வம் ததும்பிய மனது அது ! இருட்டிலிருந்து ஒளி இலை ஓரம் பனித்துளி கோடை காலத்தின் ஏக்கம் ஒரு துளி மழை நனைந்தால் சளி வரும் ஒரு வித மயக்கம் மாற்றங்கள் நம்மைக் கேட்பதில்லை ஓட்டங்கள் ஓடாமல் எவருமில்லை பிடித்தால் ஏற்றுக் கொள் இல்லா விட்டால் பழகிக் கொள் மனம் இன்று போல் நாளை இல்லை குழந்தை மனம் கொண்டிரு தூய்மையாய் பேணிக் காத்திரு[…]

கடன்

தெய்வமே ஏன் வந்தாயோ ? என் வாழ்க்கையில் ஏன் வந்தாயோ ? உலகை நல்வழியில் மட்டுமே பார்த்த என் கண்களைக் கழுவி விடத்தான் வந்தாயோ ? கையளவு நெஞ்சத்தைக் கூட வலி நிரப்பி கனக்கச் செய்யும் வித்தையைச் சொல்லித்தர வந்தாயோ ? வாளையும் வில்லையும் தில்லையும் மிஞ்சும் சொல்லின் வீரியத்தை உணர்த்திட வந்தாயோ ? அச்சொல்லை விடவும் கொடியது புறக்கணித்தில் என்று வெளிச்சம் போட்டுக் காட்ட வந்தாயோ ? திருவிழாவில் தொலைந்த பச்சைப் பிள்ளையின் ஏக்கத்தை வளர்ந்த[…]

சாதிக்கப் பிறந்தவனடா நீ!

  வெற்று வேடிக்கை இல்லை வாழ்க்கை, ஊற்று போல் தினம் தினம் பிரச்சினைகள் எழலாம், நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை, உன் விருப்பம் போல் நடக்காமல் போகலாம். சூழ்நிலைகளின் சூழ்ச்சியால்  நீ வீழாதே! காலத்தின் கட்டுக்குள் துவண்டு விடாதே! தவறி விழுந்தால் மறு நொடியே, நிமிர்ந்து எழு! வாழ்வெனும் வள்ளல், வாய்ப்புகளை வழங்கும், அதைப் பயன்படுத்தி வெற்றி கொள் எங்கும்! இலவச இணைப்புகள் நன்றாய் பயன்படுவதில்லை, கஷ்டமில்லா வாழ்வும் சரித்திரம் உருவாக்குவதில்லை,[…]

தோழி

  அவளின் நாணமாய் வளையும் பாதையின் முடியா தூரம் தான் எத்தனை? சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள்?” என்று என்னைக் கேட்கிறார்கள் தோழி என்று சொல்லத் தான்[…]

 கண்ணன் என்னும் மாயன்

  அவன் கண்ணும் யாம் அறியா, அவன் குழலும் எம்செவி நுகரா, அவன் கவினும் யாம் காணா, அவன் இருப்பிடம் யாம் அறியா, அவன் காலத்தும் யாம்வாழா, அவன் பண்பும் யாம் உணரா. ஏனோ என் நெஞ்சம் அவன் அடி தழுவத் துடித்தது, தழுவிய பின் கண்டறிந்தேன், அவனை என் நெஞ்சினுள்!   கவிஞர் கா.கிருத்திகா, இரண்டாம் ஆண்டு, Computer Technology.

கண்ணீரின் காரணம்

  ஓ வென்று நீ குரல் கொடுக்க, நின்ற இடத்தில் நான் நடுங்கி போனேன். உன் கவலையின் காரணம் அறிய ஓடி வந்து உன்னைப் பார்த்தேன். நீயோ தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாய்! உன் விம்மல்களின் பொருளறியாது நானோ குழம்பி நிற்க, நீயோ உன் கண்ணீரால் என்னை நித்தமும் நனைத்தாய். ஆனால் உன் கண்ணீர் கண்டு பூமி சிரிக்க அப்போது தான் புரிந்தது புவியின் புத்துணர்ச்சிக்காக உன் கண்ணீரைப் பூக்கச் செய்திருக்கிறாய் என… பிறர் துயர் களைய[…]

இ(ஈ)ப்பிறப்பு

  பிஞ்சுப் பருவத்திலே பிழையாக பிச்சை ஏந்தி நிற்பதையும், யான் கண்டேன்; மங்கைக்கு மலர் தூவாமல்,திருநங்கை தஞ்சம் தேடுவதையும், யான் கண்டேன்; இனிமையான இயற்கையை,இருளில் கண் இமைத்துக் காண்பவரையும்,யான் கண்டேன்; ஓர் உயிர்க்கான உடலை, ஊருக்கே அளித்தவளையும்,யான் கண்டேன்; இப்பிறப்பைக் கண்ட கணமே பிரம்மன் மீது நன்றி கொண்டேன்!   கவிஞர்: விஸ்வஜித் ஆகாஷ், நான்காம் ஆண்டு,Automobile Department.  

ஊழல்

    ஊனமுற்ற சமுதாயம் உழைப்பை மறந்து ஊழலை நம்பியது, சிறுதுளியும் சேர்ந்து பெருவெள்ளமாக பெருக்கெடுக்க நாடே நஞ்சாகியது, தரமில்லா தாவரங்கள் அரியாசனத்தில் அமர, வாசமான மலர்கள் கால்வாயில் கரைகிறது, சட்டத்தின் எதிரே கள்வனின் மொழியை அரசன் ஏற்க காசோலையே காற்றாகியது,     நெழிந்த நாட்டை உயரம் உயர்த்த நீயே உரமாகு என் தோழா!!!!   கவிஞர்: விஸ்வஜித்ஆகாஷ், நான்காம் ஆண்டு, Automobile Department.