எம்.ஐ.டி தமிழ்மன்றம் நடத்திய பொங்கல் விழா!

பொங்கல் மற்றும் போட்டிகளின் அறிக்கை

தைப்பொங்கல் என்பது தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு,இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்,

ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.

 

 

 

தைப்பொங்கல் வரலாறு

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

 

 

 

 

எங்கள் கொண்டாட்டம்

அது போன்றே நாங்களும் புத்தரிசியை புதுப்பானையில் பொங்கல் விழா அன்று பொங்கலிட்டோம்.

மேலும் கலை நிகழ்ச்சிகளாக பறை அடித்தல், சிலம்பம் சுற்றுதல், தீச்சிலம்பம் சுற்றுதல், பம்பரம் சுற்றுதல்,உரியடித்தல் போன்றவை நடைபெற்றது.

 

 

 

 

போட்டிகளின் விவரங்கள்

1.கதை

2.கவிதை

3.ஓவியம்

4.வினாடி வினா

5.வார்த்தை விளையாட்டு

6.தனித்திறன்

 

இந்த ஆறு போட்டிகளும் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. ஆர்வம் உள்ள அநேக  மாணவர்களின் பங்கேற்பால் மாணவர்கள் தங்களது திறனை இந்த போட்டிகளின் மூலம் வெளிக்கொண்டு வந்தனர்.

 

 

 

 

பரிசளிப்பு விழா விவரங்கள்

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது . விழாவின் நாயகன் கெ.குமார் அவர்கள் “தமிழ் இனி வாழும்” என்ற தலைப்பில் அனல் பறக்கும் படி பேசினார் . போட்டியில் வென்ற மாணவர்கள் அவர் கையால் பரிசுகளையும் தமிழ்மன்றத்தின் உறுப்பினர்களும் அங்கு வந்தவர்களும் அவர் உரையால் மனநிறைவுடன் சென்றனர்.

 

இத்துடன் தமிழ்மன்றத்தின் போட்டிகளும் , பொங்கல் விழாவும் இனிதே முடிந்தது!

 

 

 

இதை எழுதியவர் :  

தமிழ்செல்வி.சி, 

இரண்டாம் ஆண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *