கல்வி முறை கண்ட மாற்றங்கள் , அதன் விளைவுகள்

ஒரு நாட்டை அழிக்க வேண்டுமென்றால் அதன் அடையாளம் , மொழி ஆகியவற்றை அழித்தால் தான் இது சாத்தியம். இது யாவரும் அறிந்ததே. ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னர், இந்திய நாடு பல வகைகளில் செல்வம் மிகுந்த பூமியாகவே இருந்தது. அவரவர் அவரவரது தொழில்களைச் செய்து இன்புற்று வாழ்ந்தனர். பல அபூர்வ ஒளி வீசும் கற்கள் அரசர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தன. விவசாயம் நன்றாக நடைபெற்று வந்தது. வாஸ்கோ டா காமா முதன் முதலாக இந்தியாவிற்கு ஐரோப்பாவிலிருந்து கி.பி . 1498 ஆம்[…]