எதிலே நிம்மதி?

நிம்மதி வண்டுக்கு தேன் உண்ட பின் நிம்மதி நதிக்கு கடலில் இணைந்த நிம்மதி வண்டுக்கு தேன் உண்ட பின் நிம்மதி நதிக்கு கடலில் இணைந்த  பின் நிம்மதி கார்மேகத்திற்கு மழையை பொழிந்த பின் நிம்மதி மழைத்துளிக்கு மண்ணில் கலந்த பின் நிம்மதி   ஒளிக்கு இருள் நீக்கிய பின் நிம்மதி ஒலிக்கும் ஓசை இசையான பின் நிம்மதி காய்க்கு கனியான பின் நிம்மதி மண்ணில் வாழும் மாந்தர்க்கு உழைப்பின் பலன் கிடைத்த பின் நிம்மதி கவலைகள் ஒழிந்த பின் நிம்மதி வெறுப்புகள்,[…]

தோழி

  அவளின் நாணமாய் வளையும் பாதையின் முடியா தூரம் தான் எத்தனை? சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள்?” என்று என்னைக் கேட்கிறார்கள் தோழி என்று சொல்லத் தான்[…]

ஊழல்

    ஊனமுற்ற சமுதாயம் உழைப்பை மறந்து ஊழலை நம்பியது, சிறுதுளியும் சேர்ந்து பெருவெள்ளமாக பெருக்கெடுக்க நாடே நஞ்சாகியது, தரமில்லா தாவரங்கள் அரியாசனத்தில் அமர, வாசமான மலர்கள் கால்வாயில் கரைகிறது, சட்டத்தின் எதிரே கள்வனின் மொழியை அரசன் ஏற்க காசோலையே காற்றாகியது,     நெழிந்த நாட்டை உயரம் உயர்த்த நீயே உரமாகு என் தோழா!!!!   கவிஞர்: விஸ்வஜித்ஆகாஷ், நான்காம் ஆண்டு, Automobile Department.

திரும்பி பார்த்துக்கொண்டே இருக்கிறாள்

By Vicky Muraliஉன்னை பார்க்கும் நேரத்தை விட பார்க்காத நேரத்தில் அதிகமாய் பார்க்கிறேன் ..!பார்க்கும் நொடியை விட… பார்க்காத நொடியில் காதல்ஒளிந்துகொண்டிருக்கிறது…..!நீ இருந்திருந்தால் கூட இவ்வளவு காதலித்து இருப்பேனா தெரியாது……!போனதால் மட்டுமே அந்த சுவடுகள் உள்ளது ……இருந்திருந்தால் சுவடுகள் காதல் சுவடுகள் செத்திருக்கும்….!உதட்டோடு உதடு ஓட்டுவதை விட உன் பார்வைக்காக காத்திருந்த நொடிகளிலே காதல்அதிகம் ….!காதலித்ததை விட நான் காதல் சொல்லும் முன் கடந்து செல்லும் முன் …இந்த பார்வை காதலா என்னும் சந்தேகத்தில் காதல் அதிகம்[…]

உயிரற்ற உடல் நீ

By Guru Prasath 29.9.14 அன்று எங்கள் நண்பன் முருகானந்தம் இறந்த போது எனது பேனாவில் வழிந்த கண்ணீர் கவிதையாக…. உயிரற்ற உடல் நீ உயிருள்ள பிணம் நாங்கள். மரணத்திற்கு உன் உடல் சமைக்கப்பட்ட பொழுதிலிருந்து உயிர்ப்பூ இரண்டும் வற்றா உப்புக் குளங்கள். பதினெட்டு வயதில் பரமனைச் சேர்ந்தாயே பாவிகள் நாங்கள் ஏதும் பிழை செய்தோமோ? விதியின் சதி உன் மரணம். இதோ இப்பொழுது வானம் அழுகிறது உன் பாதம் பதிந்த பாதைகளை நனைத்து. மூன்று நாட்கள் முழுதும்[…]

இதுவும் ஓர் கடமையே

By சுதர்ஷன்  சுந்தரவரதன் (2011502050) 2012  ஆம்  ஆண்டில்  ரயில்  விபத்துகள்  பற்றி  ஓர்  கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அதன்படி  வருடத்திற்கு  சுமார் 15000 பேர் ரயில்  விபத்துகளால் இறக்கின்றனர். இதற்கு  முக்கியமான  காரணங்கள்  இரண்டு.  ஒன்று :  கூட்டம்  அதிகமாக  உள்ள ரயில்களில்  தொற்றிக்  கொண்டு போவது. மற்றொன்று :  படிகளைப் பயன்படுத்தாது  தண்டவாளங்களைக்  கடப்பது .  இவை இரண்டுக்கும் பொதுவான  காரணம்  ஒன்று உண்டு. அது  மக்களின்  அலட்சியம்  ஆகும். நமது  கல்லூரி மாணவர்களை  எடுத்துக்கொள்வோம். தினமும் காலை[…]

முதலடி

கனவுகள் ஆயிரம்  சுமந்நு… கற்பனை வானில் பறந்நு… ஊர்,உறவுகள் துறந்நு… உணர்வுகளிள் கலந்நு… விழியோர நீருடண் வீட்டிற்கு விடைகொடுத்து… புண்சிரிப்புடண் புதுஉறவுகள் தொடங்கி…. அக்னி சிறகுகள் விரித்து,அகிலம் ஆழ வரும் அன்பு உள்ளங்களுக்கு…. எம்.ஐ.டி குவ்லின் (The MIT Quill) ஆத்ம வாழ்த்துக்கள்…. – அப்துர் ரஹ்மான்

வேரைக் கிளப்பிய வேர்கிளம்பி

By Flave Sheenu D ஒரு அழகான மாவட்டம். எங்கே பார்த்தாலும் பசுமை. அங்கே வெயில் என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வூரை ஆதவன் ஆளவில்லை. இடி,மின்னல்,மழை ஆட்சி செய்யும் மகத்தான அரசாங்கம். வறண்ட பூமி என்றால் என்னவென்றே தெரியாத மக்கள் வாழும் ஒரு சொர்க்கம்.                 மேகம் தவழம் உயரமான மலைச்சாரல்கள், நெல்மணிகள் எடையினால் தலைசாய்ந்து நிற்கும் கதிர்கள், என்றென்றும் பச்சையாகவே இருக்கும் வயல்வெளிகள், காற்றின் இசைக்கேற்ப ஆடும் வண்ண நிறப்பூக்கள், வளைந்து நெளிந்து ஓடும் ஆறுகள், வானைத்தொடும்[…]