நினைவுகளின் பக்கங்கள்

பிடித்தும் பிடிக்காமலும் புரட்டப்படும் சில புத்தகங்களின் பக்கங்களென சரிந்தோடுகின்றன இக்கல்லூரி நாட்கள். ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும் ஒரு புதிய அத்தியாயத்தின் பிறப்பிடம் ஆகின்றன. இங்கே எழுதப்படும் கதைகளும் தீட்டப்படும் ஓவியமும் கற்பனையோ கனவின் நிழலுருவமோ அல்ல யதார்த்தங்களின் கலவை. வண்ண ஓவியமாக்க நினைத்து கருமை மட்டுமே படர கருப்பு வெள்ளையில் மிளிரும் பக்கங்களும் ஏராளம். எழுத மனம் வராமல் முதல் சில வரிகளிலே பேனா முனை முறிக்கப்பட்டு வறண்டு போய் வெளிரிப்போன பல வெள்ளைப்பக்கங்களும் இங்கே உண்டு.[…]

தோழி

  அவளின் நாணமாய் வளையும் பாதையின் முடியா தூரம் தான் எத்தனை? சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள்?” என்று என்னைக் கேட்கிறார்கள் தோழி என்று சொல்லத் தான்[…]