அவளின் நாணமாய் வளையும் பாதையின்
முடியா தூரம் தான் எத்தனை?
சிநேகிதனாய் மைல் கற்கள்
நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள்
நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று
மனவெளி வழியில் காதல் நீரூற்று
அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம்
கைரேகையை மனது அறியும்
என் துணை அவள் என்று என்றும்
வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும்
நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள்
“யார் அவள்?” என்று என்னைக் கேட்கிறார்கள்
தோழி என்று சொல்லத் தான் எத்தனிக்கிறேன்
என்னை அறியாமல் தாய் என்கிறேன்.
கவிஞர் க.பவித்ரா, மூன்றாம் ஆண்டு, E&I department.