நீர் இன்றி அமையாது உலகு!

       

       அகர முதல எழுத்தெல்லாம் சரி வர பாடி, குறளின் குரலாய் விளங்கும் திருவள்ளுவர் உதிர்த்தச் சொற்கள் இவை.கொஞ்சம் அந்த தொடரின் பொருள் குறித்து சிந்தியுங்கள்.

       உலகம் என்னும் எந்திரம் உயிராட நடமாட , அப்புவியில் உள்ள உயிர்கள் உயிர் வாழத்தேவை, நீர்.சுருக்கமாகச் சொன்னால், எந்திரத்திற்கு எரிபொருள் போலே , புவிக்கு நீர்.நீர் இல்லாத உலகம் என்பது அன்பு இல்லாத வாழ்க்கையை போலவே,நினைத்துக் கூட பார்க்க முடியாது.

       சரி,இப்போது தாய் தமிழ்நாட்டிற்கு வருவோம்.ஏரி இருந்த இடங்களில் எல்லாம் தற்போது        குடியிருப்புகள் உள்ளன.நிலத்தடி நீர் மிகவும் சொற்பமாகவே உள்ளது. தமிழ்நாட்டில் பிறந்து, வங்கக் கடலில் கலக்கும் தாமிரபரணியை கூட முழுதாக பயன்படுத்த முடிவதில்லை.சமீபத்தில் அந்த குளிர்பான நிறுவனம் மீதான தடையை நீதி மன்றம் விலக்கிக் கொண்டது.ஆனால்,விவசாயம் செய்யவோ நீர் இல்லை.

       அள்ளிக் கொடுத்த வள்ளல்கள் எழுவர் வாழ்ந்த நம் மண்ணில் தற்போது நீருக்காக பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஏன் இந்த நிலை நமக்கு ?

       சில காலத்திற்கு முன்னர் கூட நம் மண்ணில் நிறைய நீர்நிலைகள் இருந்துள்ளதற்கு சான்றுகள் உள்ளன.ஆனால் அவை யாவும் குடியிருப்புகளாய் மாற்றப்பட்டு உள்ளதாலும் சரியாக தூர்வாராததாலும் அவை யாவும் அழிந்து போயின.நம் மக்கள் அனைவரும் விழிப்புற்று மீதம் உள்ள ஏரி,குளங்களை தூர் வாரி சரியாக பராமரித்தால் அடுத்த தலைமுறைகளுக்கு நீர் கிடைக்கும்.

       இரண்டு ஆண்டுகளுக்கு முன்,சென்னையில் பெய்த வரலாற்று காணாத மழையினால் மூன்று மாவட்டங்கள் மூழ்கி தவித்தன.அவ்வளவு நீரையும் சேமித்து இருந்தால் இன்றைய தினம் இவ்வளவு கையேந்த வேண்டி இருக்காது.ஆகவே எல்லோரும் மழை நீர் சேமிப்பு திட்டத்தை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்.

       ஆட்சியில் உள்ள அரசுகள் தங்கள் வேலையை சரியாக செய்திருந்தால் விவசாயிகள் வாழ்க்கை கஷ்டமில்லாமல் இருந்திருக்கும்.ஆட்சியில் இருக்கும் போது செயல்படாததற்கு காரணம் கேட்டால் அது முந்தைய அரசு செய்யவில்லை என்று கூறி சிறு பிள்ளைத் தனமாய் விளையாடுகிறது.வேடிக்கையாய் உள்ளது . மறு கணம், தீயாய் எரிகிறது மனம்.அரசு அலட்சியம் இல்லாமல் செயல்பட வேண்டும்.

       அது எப்படி கர்நாடகா அரசு கடந்த வருடம் வறட்சி பாதித்த மாநிலமாய் அறிவித்து ₹1782 கோடியைப் பெற்றது?காவிரி அங்கு தான் பிறக்கிறது, கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று தமிழகத்திற்கு  நீர் வழங்கவில்லை.ஆனாலும் இழப்பீடு ஆயிரம் கோடிக்கு மேல்!இதில் அதற்கு “வறட்சி பாதித்த மாநிலம் என்று பெயர் வேறாம்.மனதை ஆற்ற முடியவில்லை,வேதனை மனதை வாட்டுகிறது!

       உணவு  தரும் விவசாயி டெல்லியில் எலியை திங்கிறான்.இது வேறு எங்கேயாவது நடக்குமோ! பிரச்சினைக்கு தீர்வு என்று எதையும் சொல்ல முடியாது , ஆனால் முடிந்த அளவு ஏரி குளங்களை பராமரிப்பதன் மூலம் சிறிது சமாளிக்கலாம்.

முடிவில் இந்த வசனம் படி நடந்தால் நன்று

             “கடவுள் கெட்டவங்களுக்கு அள்ளிக் கொடுப்பான், ஆனா கைவிட்டுருவான்.

             நல்லவங்களை சோதிப்பான் , ஆனா கைவிட மாட்டான்.”

இறைவா….தமிழகம் உன் கையில்…!!!

இதை எழுதியவர் :

அருண் பாலாஜிமூன்றாம்  ஆண்டு,                                                                  மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *