கடன்


தெய்வமே ஏன் வந்தாயோ ?
என் வாழ்க்கையில் ஏன் வந்தாயோ ?
உலகை நல்வழியில் மட்டுமே பார்த்த என் கண்களைக் கழுவி விடத்தான் வந்தாயோ ?
கையளவு நெஞ்சத்தைக் கூட வலி நிரப்பி கனக்கச் செய்யும் வித்தையைச் சொல்லித்தர வந்தாயோ ?
வாளையும் வில்லையும் தில்லையும் மிஞ்சும் சொல்லின் வீரியத்தை உணர்த்திட வந்தாயோ ?
அச்சொல்லை விடவும் கொடியது புறக்கணித்தில் என்று வெளிச்சம் போட்டுக் காட்ட வந்தாயோ ?
திருவிழாவில் தொலைந்த பச்சைப் பிள்ளையின் ஏக்கத்தை வளர்ந்த பிள்ளை எனக்கு புரியவைக்க வந்தாயோ ?
இல்லை முட்டாளாய் இருந்த என்னை மாற்றம் நோக்கி நகரச்செய்து கலியுகத்தின் கில்லாடியாக உருமாற்றிட வந்தாயோ ?
இவ்வளவு நன்மைகளையும் வரமளித்து என்னைக் கடனாளியாய் கலங்க விட்டுவிட்டு ஏன் தான்   சென்றாயோ ?

 

 

கவிஞர்    க.பவித்ரா,  மூன்றாம் ஆண்டு,   E&I department.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *