சாதிக்கப் பிறந்தவனடா நீ!

  வெற்று வேடிக்கை இல்லை வாழ்க்கை, ஊற்று போல் தினம் தினம் பிரச்சினைகள் எழலாம், நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை, உன் விருப்பம் போல் நடக்காமல் போகலாம். சூழ்நிலைகளின் சூழ்ச்சியால்  நீ வீழாதே! காலத்தின் கட்டுக்குள் துவண்டு விடாதே! தவறி விழுந்தால் மறு நொடியே, நிமிர்ந்து எழு! வாழ்வெனும் வள்ளல், வாய்ப்புகளை வழங்கும், அதைப் பயன்படுத்தி வெற்றி கொள் எங்கும்! இலவச இணைப்புகள் நன்றாய் பயன்படுவதில்லை, கஷ்டமில்லா வாழ்வும் சரித்திரம் உருவாக்குவதில்லை,[…]