கல்வி முறை கண்ட மாற்றங்கள் , அதன் விளைவுகள்

ஒரு நாட்டை அழிக்க வேண்டுமென்றால் அதன் அடையாளம் , மொழி ஆகியவற்றை அழித்தால் தான் இது சாத்தியம். இது யாவரும் அறிந்ததே.


ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னர், இந்திய நாடு பல வகைகளில் செல்வம் மிகுந்த பூமியாகவே இருந்தது. அவரவர் அவரவரது தொழில்களைச் செய்து இன்புற்று வாழ்ந்தனர். பல அபூர்வ ஒளி வீசும் கற்கள் அரசர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தன. விவசாயம் நன்றாக நடைபெற்று வந்தது.


வாஸ்கோ டா காமா முதன் முதலாக இந்தியாவிற்கு ஐரோப்பாவிலிருந்து கி.பி . 1498 ஆம் ஆண்டு வந்தார். கோழிக்கோடு , அவர் வந்திறங்கிய நகரம். அங்கே அந்த நகரத்தின் செல்வச் செழிப்பை கண்டு பெரும் ஆசை கொண்டார். ஆக இப்படி நறுமணப் பொருள்களுக்காக (spices) வந்தவர்கள் தாம் இந்த மேலை நாட்டினர்.போர்ச்சுகீசியரான இவர் கடல் வழித் தடத்தை கண்டறிந்த பின் பலர் இப்படி வணிகத்திற்காகத் தான் நமது நாட்டில் காலடி வைத்தார்கள். நிலத்தின் வழியாக செல்ல வேண்டுமென்றால், அரபு நாட்டவரிடம் வரி செலுத்த வேண்டும். அதை தவிர்ப்பதற்காகவும், அவர்கள் இந்த கடல் வழித் தடத்தை பயன்படுத்தினர்.


பின்னர் டச்சுக்காரர்கள்,  பிரெஞ்சுகாரர்கள் வந்தனர். மகா பாவிகளான ஆங்கிலேயர் அதன் பிறகு தான் வந்தனர். வணிகர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி அதற்கு , “கிழக்கிந்திய கம்பெனி” என்று பெயரிட்டுக் கொண்டனர். காலமும் சென்றது.


      


இரு அரசர்களுக்கிடையே பிரச்சினை எழும்படி செய்து, அதையே போர் வரை கொண்டு சென்று, “நாங்கள் தங்களுக்கு உதவுகிறோம்” என்று கூறிக் கொண்டே பல தேசங்களை வென்றனர். இவர்களின் சூழ்ச்சியில் சிக்கிய இந்திய அரசர்கள் தங்களுக்கு உரிமையானவற்றை இழந்தனர். ஆனாலும் அவர்களால் நம் நாட்டை முழுமையாக தங்கள் பிடிக்குள் வந்து விட்டதாக உணர முடியவில்லை. ஏனென்றால் இந்தியப் பொருளாதாரம் அப்போது நிலையாகத் தான் இருந்தது.


இந்த அரக்கர்கள் தங்கள் நாட்டுப் பொருட்களை இங்கு வந்து பெரும் தொகைக்கு விற்றனர். வரியும் அதிகப்படியாகவே பெற்றுக் கொள்ளப்பட்டது.


இதில் மிக மகத்துவம் வாய்ந்தது ஒன்று உண்டு . அது என்னவென்றால் ஆங்கிலேயர் தம் கல்வி முறையை இங்கு அறிமுகப்படுத்தியது .

நாடு அடிமையாகி தவித்ததற்கு இதுவே முக்கியமான காரணம். இதில் சிக்கியவர்கள் தான் நம்மவர்கள். இன்னும் மீளவில்லை! பிரான்சு சென்றால் அங்கே எல்லோரும் பிரெஞ்சு மொழியில் தான் உரையாடுவர். கல்வியும் பிரஞ்சு வழிக் கல்வி தான். ஆங்கிலேயர் ஆங்கிலத்தில் கல்வி கற்கின்றனர், ஏனென்றால்  அது அவர்களின் தாய் மொழி. ஆனால் நம் நாட்டில், அவர்கள் அவர்களது கல்வி முறையை அறிமுகப்படுத்தி நம் சமுதாயத்தின் தூண்களை இடித்து விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.


அடிமைக் காலத்தில் துயரப்பட்ட போது தான், சி. வி. ராமன் ஐயா அவர்கள், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். கல்கத்தாவில் ஆராய்ச்சி செய்து வந்த இவர், எப்படி இதைப் பெற முடிந்தது?

தற்போதுள்ள மாணவர்களில் ஒரு பகுதியினர், ஆங்கிலத்தில் உள்ள பாடங்களை புரியாவிட்டாலும், அப்படியே மனப்பாடம் செய்து விடுகின்றனர். இதனால் என்ன, என்ற கேள்வி எழலாம். இவர்கள் படித்து முடித்து வேலைக்கு வரும் போது திறமையானவர்களாய் இருப்பது சந்தேகமே.


சமச்சீர் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் எப்படி இந்திய தொழில்நுட்ப நிறுவனம் நடத்தும் (IIT)  நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது?


இந்தியாவிலேயே மிக உயர்ந்த கல்வி நிறுவனம்,  இந்திய தொளில்நுட்ப நிறுவனம் (IITs). அதில் எத்தனை தமிழக மாணவர்கள் பயில்கின்றனர் ?


அனைத்து துறைகளிலும் சாதிப்பவர்கள் , இந்தியர்கள்.இது மறுப்பதற்கில்லை. ஆங்கிலம் வேண்டாம் என்று கூறவில்லை . தேவைக்கு ஏற்ற போது அதை பயன்படுத்துங்கள்.உங்கள் தாய் மொழியை மறந்து விடாதீர்கள். அசிங்கமாய் கருதாதீர்கள்.


கல்வியில் தரம் வேண்டும்..!

ஜெய் ஹிந்த்….!


எழுதியவர் : அருண் பாலாஜி, மூன்றாம் ஆண்டு, ECE.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *