வாக்குரிமை நம் வாழ்வுரிமை

நாளை நம் எதிர்காலம் கறை படியாமல் இருக்க, நாம் நம் ஆள்காட்டி விரல்நுனியை கறை படுத்திக்கொள்ளும் நாள்! நாளை நாம் சிந்தித்துச் செலுத்தப்போகும் வாக்கு, நம் நாட்டின் நயவஞ்சக அரசியல்வாதிகளுக்கு நாமிடும் தூக்கு! கவிஞர் : கருப்பசாமி, நான்காம் ஆண்டு, Aerospace Engineering. #TheMITQuill #Elections2019

காத்திருக்கும் கவிஞன்!

  தமிழே,அன்றோ; நீ கம்பர் அருகில் சென்றாய், கம்பராமாயணம் பிறந்தது! ஔவையாரை நோக்கிச் சென்றாய், ஆத்திச்சூடி பிறந்தது! அகத்தியர் என்னும் முனிவரைத் தேர்ந்தெடுத்தாய், அகத்தியம் தோன்றியது! தொல்காப்பியர் என்னும் மகானை நோக்கினாய், தொல்காப்பியம் தோன்றியது! திருவள்ளுவரைக் கண்டாய், திருக்குறள் உருப்பெற்றது! சேக்கிழாரைப் பார்த்தாய், பெரியபுராணம் உருப்பெற்றது! பாரதியை நோக்கிப் பயணித்தாய், பல புரட்சிப் பாடல்கள் உருவெடுத்தன! பாவேந்தரை நோக்கிச் சென்றாய், பல இனிய பாடல்கள் உருவெடுத்தன! நீ எப்பொழுது என்னை அழைப்பாய், நானும் ஒரு கவியாக..  […]

விவசாயியின் நிலை!

  வானம் பார்த்த பூமிதனை வயிற்றுபப் பசிக்கு விளையச்செய்து, வான்மழை பொழியச் செய்து வானவில் இரிக்கச் செய்து, வாயுரைத்த வழிகள்தனை வழிவழியாய் வாழ்த்தி வாழ்ந்து, வசிக்கும் வட்டம் எல்லாம் வயல்வெளி காணச்செய்தான்!   அவன் விவசாயி ஆம் விவசாயி;   பசிநீங்கா பாட்டாளி பணிசெய்து பால்வார்த்தான், புதுமையின் பிறைகாணும் பணியாளன் பசிக்காக!   பணம் பணம் எனப் பட்டணம் பார்த்துச் சென்றான் கோமாளி வயிற்றுக்கு வழிசெய்ய மறந்த நாம் ஏமாளி!   ஈடுசெய்தான், விவசாயி ஆம் விவசாயி;[…]

கல்லூரி நாட்கள்!

ஈரிரு திங்கள் இன்னுமொரு நான்காண்டுகளாய் மாறாதோ! மரணமில்லாக் காலம் சூழும் மந்திர உலகம் உண்டெனில், மரணித்தும் செல்லலாம் MITயவள் மார்பில் சாய!   சத்தமில்லா அதிகாலை, சுற்றி திரியும் இருள் வேளை! பக்கமொன்று பிரிந்திருந்திருந்தால் எங்கள் பாதங்கள் நோகுமோ என்று ஒற்றை வழி இட்டாய் -ஒட்டுமொத்த எழில் புதைத்தாய்!   சிக்கிக்கொண்டோம் சிறையில் என்றிருந்தோம்,பின்னர் புரிந்தது-அது உன் கருவறை என்று ! இவள்அரவணைப்பில் கண்ணயர்ந்தால், காலைச்சூரியனின் காட்சி ஏது?   ஐந்து நிமிட பரபரப்பு,அழைத்துச் செல்லும் காலை வகுப்பு;[…]

But in dreams

She never cared his existence She acted hard every day, avoiding him, With a lot of hatred to fire back, But a little love to confess.   As it was time to move apart. Love though unapparent in daily sight Erupted as a glow of light Diminishing second by second, defining the pain of love.[…]

சாதிக்கப் பிறந்தவனடா நீ!

  வெற்று வேடிக்கை இல்லை வாழ்க்கை, ஊற்று போல் தினம் தினம் பிரச்சினைகள் எழலாம், நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை, உன் விருப்பம் போல் நடக்காமல் போகலாம். சூழ்நிலைகளின் சூழ்ச்சியால்  நீ வீழாதே! காலத்தின் கட்டுக்குள் துவண்டு விடாதே! தவறி விழுந்தால் மறு நொடியே, நிமிர்ந்து எழு! வாழ்வெனும் வள்ளல், வாய்ப்புகளை வழங்கும், அதைப் பயன்படுத்தி வெற்றி கொள் எங்கும்! இலவச இணைப்புகள் நன்றாய் பயன்படுவதில்லை, கஷ்டமில்லா வாழ்வும் சரித்திரம் உருவாக்குவதில்லை,[…]

தோழி

  அவளின் நாணமாய் வளையும் பாதையின் முடியா தூரம் தான் எத்தனை? சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள்?” என்று என்னைக் கேட்கிறார்கள் தோழி என்று சொல்லத் தான்[…]

 கண்ணன் என்னும் மாயன்

  அவன் கண்ணும் யாம் அறியா, அவன் குழலும் எம்செவி நுகரா, அவன் கவினும் யாம் காணா, அவன் இருப்பிடம் யாம் அறியா, அவன் காலத்தும் யாம்வாழா, அவன் பண்பும் யாம் உணரா. ஏனோ என் நெஞ்சம் அவன் அடி தழுவத் துடித்தது, தழுவிய பின் கண்டறிந்தேன், அவனை என் நெஞ்சினுள்!   கவிஞர் கா.கிருத்திகா, இரண்டாம் ஆண்டு, Computer Technology.