அன்பின் இலக்கணமாய்…

MIT எனும் Main program-ல்
Infiniteloop ஆக அமைந்த உறவாம்,
“Snrs-jnrs” என்ற இலக்கணம்,
ஓர் சொல்லில் அடங்கா காவியம்!
முதன்முறை பயந்த விழிகளுடன்
சொற்கள் வெளிவராமல் நின்றநேரம்
“Intro kudu” என்றவுடன் “Snr அப்படினா?”
என்று முழித்து நின்ற நொடிகளையும்
ஏனோ நினைக்கையில்
நகை தான் தோன்றுகிறது!
“Ragging” என்ற பெயரில்
எங்கள் சேட்டையை நீங்கள் ரசித்து,
“Task” என்ற பெயரில்
உங்கள் குறும்பை நாங்கள் அறிந்து,
“Series”  என்ற குடும்பமாகி,
“Treat” என்று பாசங்கள் பரிமாறி,
“Assess-Sem” என்று நாங்கள் கேட்ட
“Doubt” யை சரிசெய்ய நீங்கள்
விழித்திருந்த இரவுகள் தான் எத்தனை!
“Seniors” என்ற அழைத்தற்கு
அன்பை மட்டுமே அள்ளி தந்து
அக்கறை மட்டும் கொட்டி தீர்த்து
சிரிப்புகள் மட்டுமே பரிசளித்து
எங்கள்  திறமைகளை வெளிக்கொணர்ந்து  எங்கள் சிக்கல்களையும் கைக்கோர்த்து சமாளித்து இம்சைகளைப் பொறுத்து கோபங்களை மன்னித்தும் மறந்ததும் அப்பப்பா எத்தனை எத்தனை!


நாங்கள் அழைத்த ஓர் குரலுக்காகவே,
நீங்கள் முதன்முதலில் “Jnr” என்றழத்தது எங்களைத்தான் என்ற பெருமிதமும், நாங்கள் இனி “Snr” என்றழைக்க இனி யாருமில்லையே என்ற ஏக்கமும் ஏனோ கண்ணீர் சொட்டத்தான் செய்கிறது…..ஆயினும்,
மனதால் பிரியாத எந்த உறவுக்குமே
“Farewell” எனும் வார்த்தை முடிவல்ல,
இதுவும் ஓர் நல்லதிற்கான ஆரம்பமே!கவிஞர் : ஜெய ஸ்ரீ , மூன்றாம் ஆண்டு, Computer Technology.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *