கல்லூரி நாட்கள்!

ஈரிரு திங்கள் இன்னுமொரு நான்காண்டுகளாய் மாறாதோ! மரணமில்லாக் காலம் சூழும் மந்திர உலகம் உண்டெனில், மரணித்தும் செல்லலாம் MITயவள் மார்பில் சாய!   சத்தமில்லா அதிகாலை, சுற்றி திரியும் இருள் வேளை! பக்கமொன்று பிரிந்திருந்திருந்தால் எங்கள் பாதங்கள் நோகுமோ என்று ஒற்றை வழி இட்டாய் -ஒட்டுமொத்த எழில் புதைத்தாய்!   சிக்கிக்கொண்டோம் சிறையில் என்றிருந்தோம்,பின்னர் புரிந்தது-அது உன் கருவறை என்று ! இவள்அரவணைப்பில் கண்ணயர்ந்தால், காலைச்சூரியனின் காட்சி ஏது?   ஐந்து நிமிட பரபரப்பு,அழைத்துச் செல்லும் காலை வகுப்பு;[…]