காத்திருக்கும் கவிஞன்!

  தமிழே,அன்றோ; நீ கம்பர் அருகில் சென்றாய், கம்பராமாயணம் பிறந்தது! ஔவையாரை நோக்கிச் சென்றாய், ஆத்திச்சூடி பிறந்தது! அகத்தியர் என்னும் முனிவரைத் தேர்ந்தெடுத்தாய், அகத்தியம் தோன்றியது! தொல்காப்பியர் என்னும் மகானை நோக்கினாய், தொல்காப்பியம் தோன்றியது! திருவள்ளுவரைக் கண்டாய், திருக்குறள் உருப்பெற்றது! சேக்கிழாரைப் பார்த்தாய், பெரியபுராணம் உருப்பெற்றது! பாரதியை நோக்கிப் பயணித்தாய், பல புரட்சிப் பாடல்கள் உருவெடுத்தன! பாவேந்தரை நோக்கிச் சென்றாய், பல இனிய பாடல்கள் உருவெடுத்தன! நீ எப்பொழுது என்னை அழைப்பாய், நானும் ஒரு கவியாக..  […]