விவசாயியின் நிலை!

 

வானம் பார்த்த பூமிதனை வயிற்றுபப் பசிக்கு விளையச்செய்து,
வான்மழை பொழியச் செய்து வானவில் இரிக்கச் செய்து,
வாயுரைத்த வழிகள்தனை வழிவழியாய் வாழ்த்தி வாழ்ந்து,
வசிக்கும் வட்டம் எல்லாம் வயல்வெளி காணச்செய்தான்!

 

அவன் விவசாயி ஆம் விவசாயி;

 

பசிநீங்கா பாட்டாளி பணிசெய்து பால்வார்த்தான்,
புதுமையின் பிறைகாணும் பணியாளன் பசிக்காக!

 

பணம் பணம் எனப் பட்டணம் பார்த்துச் சென்றான் கோமாளி
வயிற்றுக்கு வழிசெய்ய மறந்த நாம் ஏமாளி!

 

ஈடுசெய்தான், விவசாயி ஆம் விவசாயி;

 

கரம் கொடுக்க மறந்தாலும் மாந்தர்
மனம் கசிய மறுத்ததில்லை!
மனம் இரங்கி வந்தாலும், அங்கே
பணம் முன்பு ஒன்றுமில்லை!
கடன் கொடுத்த கடல் மனமோ
இன்று ஈரம் கூட ஏந்தவில்லை-இருந்தும்
பதவி படைத்தவர்க்கோ பணமோகம் மறையவில்லை!

 

மாண்டான்,  விவசாயி ஆம் விவசாயி;

 

கவிஞர்: பரத்வாஜ் முரளி, இரண்டாம் ஆண்டு, Aeronautical Engineering.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *