ஈரிரு திங்கள் இன்னுமொரு
நான்காண்டுகளாய் மாறாதோ!
மரணமில்லாக் காலம் சூழும் மந்திர உலகம் உண்டெனில்,
மரணித்தும் செல்லலாம் MITயவள் மார்பில் சாய!
சத்தமில்லா அதிகாலை,
சுற்றி திரியும் இருள் வேளை!
பக்கமொன்று பிரிந்திருந்திருந்தால் எங்கள் பாதங்கள் நோகுமோ என்று
ஒற்றை வழி இட்டாய் -ஒட்டுமொத்த எழில் புதைத்தாய்!
சிக்கிக்கொண்டோம் சிறையில்
என்றிருந்தோம்,பின்னர் புரிந்தது-அது உன் கருவறை என்று !
இவள்அரவணைப்பில் கண்ணயர்ந்தால்,
காலைச்சூரியனின் காட்சி ஏது?
ஐந்து நிமிட பரபரப்பு,அழைத்துச் செல்லும் காலை வகுப்பு;
ஈராயிரம் கோடியில் எய்தா இன்பம்,
“Class cancelled”எனும்
இரு வார்த்தைகளில் !
அரவணைக்க அண்ணன் அக்கா,
ஆட்டிப்படைக்க தங்கை தம்பி ;
வழிநடத்தும் ஆசான்,
வலிமையின் உறு-
தோழன் என,அத்துனை
உறவுகளையும் அடக்கிக்கொண்டது ஒரு மந்திரம்,
“senior” எனும் திருமந்திரம்!
அறுபத்தெட்டாம் படையில்
அணிவகுத்தோம்,Hazelers எனும்-
CBCS சிங்கங்களாக!
Professorகளின் பாடங்கள்-
பொழுது போகா நேரங்கள் !
Wifi tree பரிதாபங்கள்-
ஒப்பற்ற singlesஇன் சாபங்கள் !
தூங்க வைக்கும் வெண்பொங்கல்,
துரத்தியடிக்கும் மெஸ் தோசை;
வறுமைக்கு canteen,
வயிற்றுப்பசிக்கு co-ops;
அரட்டைக்கு OAT,
அலுப்புக்கு library;
“Show your id card”பதாகை,
சோதனையின் உச்சக்கட்டம் !
வருத்தியெடுக்கும் internalகள்,
வாழவைக்கும் assignmentகள்!
பண்ணாத projectகள்,
பணக்கார printoutகள்!
வழி நெடுக அறிமுகங்கள்;
வலி,வழி,வலிமை
தரும் வாழ்க்கைப் பாடங்கள்!
கவிஞர்: விக்னேஷ் கந்தவேல், நான்காம் ஆண்டு, Computer Science and Engineering.