விவசாயியின் நிலை!

  வானம் பார்த்த பூமிதனை வயிற்றுபப் பசிக்கு விளையச்செய்து, வான்மழை பொழியச் செய்து வானவில் இரிக்கச் செய்து, வாயுரைத்த வழிகள்தனை வழிவழியாய் வாழ்த்தி வாழ்ந்து, வசிக்கும் வட்டம் எல்லாம் வயல்வெளி காணச்செய்தான்!   அவன் விவசாயி ஆம் விவசாயி;   பசிநீங்கா பாட்டாளி பணிசெய்து பால்வார்த்தான், புதுமையின் பிறைகாணும் பணியாளன் பசிக்காக!   பணம் பணம் எனப் பட்டணம் பார்த்துச் சென்றான் கோமாளி வயிற்றுக்கு வழிசெய்ய மறந்த நாம் ஏமாளி!   ஈடுசெய்தான், விவசாயி ஆம் விவசாயி;[…]