முண்டாசு கவிஞர் பாரதி

முறுக்கு மீசையும் , தலைப்பாகையும் கருநிற உடையும், வீரம் பொங்கும் கண்களும், நிமிர்ந்த நடையும், கவிப் புலமையும் என்று தமிழையும் தாய் நாட்டையும் தன் இரு கண்களாகப் போற்றி வாழ்ந்தவர் நம் பாரதியார். மகாகவி என்ற வாழ்த்தைப் பெற்று விடுதலை போராட்டத்தை நம்முள் விதைத்தவர். வேள்விப் பாட்டில் நம் பயங்களையும் துயரங்களையும் பாடியவர். “அக்கிக் குஞ்சொன்று கண்டேன் அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ” என்று[…]