எம்.ஐ.டி – கவிதை

        கானல் நீராய் சென்ற கனவுகள் நீங்காமல் நெஞ்சோடு நினைவுகள் ஆகின.. புலம்பித் தீர்த்த பொழுதெல்லாம் புன்முறுவலாய் மாறிப் போயின… அழுது தீர்த்த காலமெல்லாம் அன்பைத்  திருப்பித்தந்தன… தோற்றுப்போன என் எண்ணமெல்லாம் தாங்கும் கரங்கள் தந்தனவே… காரிருள் என்றெண்ணிய இடம் இன்று களிப்பை மட்டும் தந்தனவே… சுயநலம் இல்லா மனிதர்கள் சேவை ஒன்றை சுகமாய் கொண்டு சிறகடிக்கும் என் சகோதரர்களும் ! சகோதரிகளும் !! காலம் தந்த வரமோ !! காவியமோ !!![…]