சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை

  என்ற வள்ளுவனின் வாக்கைப் போல அனைத்து தொழில்களுக்கும் தலையாயது உழவுத்தொழிலே.ஆண்டு முழுவதும் ஏர்ப்பூட்டி நிலத்தை உழுது களத்தில் வேலைப் பார்த்துக் களைத்து போன உழவர்களுக்கு ஒரு கொண்டாட்டம் தேவை. மற்ற தொழில்கள் போல் விவசாயம் இல்லை. அறுவடை முடிந்தால் தான் பணம் வரும். பணம் வந்தால்தான் கொண்டாட முடியும். அதுதான் அறுவடை திருவிழா .உலகிலுள்ள அனைத்து இனத்திறக்கும் ஒரு அறுவடை திருவிழா இருக்கும். Thanks Giving day, Holi, சங்கராத்தி ஆகியவை அறுவடை திருவிழாக்களே.  […]