அம்மா

  தாயே…   பறந்து சென்றுவிட்டாய்.. உன்னை மறக்க சொல்லிவிட்டாய்.. நாவின் வழி தமிழ்த்தாயும்.. உன்னையல்லவா  காட்டுகிறாள்….எப்படி மறப்பேன்??   மழை சாரல்..அது நினைத்தாலும், தலை துவட்டி விட்டாய்.. உன் புடவை முந்தானை கொடுத்த சுகம்.. சொர்க்கமும் அதை  தர மறக்குமே..அம்மா   உன் மடி சாய்ந்து கொண்டால், என் சிரம் தாங்கி கொள்வாய்.. இனி..எங்க தேடுவேன் அந்த சுகம்.. கண்கள் மூட மறுக்குதடி..   உன் கைவழி வந்த பழையசோறு, ஏழாம் சுவையை காட்டியதே.. அறுசுவையும்[…]