சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை

 

என்ற வள்ளுவனின் வாக்கைப் போல அனைத்து தொழில்களுக்கும் தலையாயது உழவுத்தொழிலே.ஆண்டு முழுவதும் ஏர்ப்பூட்டி நிலத்தை உழுது களத்தில் வேலைப் பார்த்துக் களைத்து போன உழவர்களுக்கு ஒரு கொண்டாட்டம் தேவை. மற்ற தொழில்கள் போல் விவசாயம் இல்லை. அறுவடை முடிந்தால் தான் பணம் வரும். பணம் வந்தால்தான் கொண்டாட முடியும். அதுதான் அறுவடை திருவிழா .உலகிலுள்ள அனைத்து இனத்திறக்கும் ஒரு அறுவடை திருவிழா இருக்கும். Thanks Giving day, Holi, சங்கராத்தி ஆகியவை அறுவடை திருவிழாக்களே.

 

நாம் அறுவடை கொண்டாட்டமாக பொங்கல் விழாவைக் கொண்டாடுகிறோம். சாதி மத வேற்றுமைகள் இல்லாத ஒரு சமத்துவ விழாவாகவே பொங்கலை நாம் கொண்டாடுகிறோம். சூரிய வெளிச்சத்தினால் தான் பயிர்களில் ஒளிச்சேர்க்கை(photosynthesis) நடக்கிறது; அதனால் தான் பயிர்கள் நன்றாக வளர்கிறது என்று நம்மவர்களுக்கு அன்றே தெரிந்த்திருந்ததால் தானோ என்னவோ கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூரிய பொங்கல் கொண்டாடுகிறோம். அதற்கு அடுத்தப்படியாக உழவர்களுக்கு உற்ற நண்பனாக இருப்பது மாடு. நிலத்தை உழுது, பயிர்களுக்கு உரம் தந்து உழவர்களின் உறவாகிப் போன மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம்.

 

தமிழர்களின் கொண்டாட்டம் என்றாலே ஒரு விருந்துதானே இருக்கும், பொங்கலுக்கு மட்டும் ஏன் ஒரு எளிமையான உணவு என்ற கேள்வி எழும். முதல் காரணம், பொங்கல் பொங்கிவருவது போல அனைவரது வாழ்விலும் இன்பம் பொங்கிவர வேண்டும்.மற்றொரு காரணம், இது குளிர்காலமாதலால் உணவு சரியாக செரிக்காது. பொங்கல் எளிமையான உணவாதலால் விரைவாக செரிக்கும். நம் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் பொங்கல் கொண்டாடுவோம்.

 

அனைவருக்கும் எம்.ஐ.டி. குவில்லின் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
bitmap

 

அ.ஆ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *