திரும்பி பார்த்துக்கொண்டே இருக்கிறாள்

By Vicky Murali

உன்னை பார்க்கும் நேரத்தை விட பார்க்காத நேரத்தில் அதிகமாய் பார்க்கிறேன் ..!
பார்க்கும் நொடியை விட… பார்க்காத நொடியில் காதல்
ஒளிந்துகொண்டிருக்கிறது…..!
நீ இருந்திருந்தால் கூட இவ்வளவு காதலித்து இருப்பேனா தெரியாது……!
போனதால் மட்டுமே அந்த சுவடுகள் உள்ளது ……
இருந்திருந்தால் சுவடுகள் காதல் சுவடுகள் செத்திருக்கும்….!
உதட்டோடு உதடு ஓட்டுவதை விட உன் பார்வைக்காக காத்திருந்த நொடிகளிலே காதல்
அதிகம் ….!
காதலித்ததை விட நான் காதல் சொல்லும் முன் கடந்து செல்லும் முன் …
இந்த பார்வை காதலா என்னும் சந்தேகத்தில் காதல் அதிகம் …..!
இப்பொழுது நீ வந்தாலும் நீ காதலி அல்ல ….
என் காதலி நான் இமை மூடியவுடன் எனக்குள் புகுந்து பேசுவாள் ……
அவள் வேறு
பிம்பம் வேறு …..
இமைகளை மூடுபவன்
ஒன்று தூங்குபவன் இரண்டு காதலிப்பவன்…..
நான் காதலிப்பவன் ….!
ஆம் நீ பிரிந்ததால் மட்டுமே காதல் வாழ்கிறது …….!
காதல் திருமணத்தில் முடிந்தால் தான் வெற்றியா …?
என் காதலி நான் இமை மூடும் போது என்னை திரும்பி பார்த்துக்கொண்டே இருக்கிறாள்…..!

love

By Vicky Murali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *