தமிழர் கொண்டாட்டம்

 

 

தைத்  திங்கள்  திருநாள்  தமிழர்  வாழ்வின் பெரு  விழாக்களுள்  மிகச்  சிறந்ததாகும். குடும்பங்களோடு கொண்டாடும் இந்த விழாவினை, கல்லூரி  உறவுகளோடு கொண்டாடுவது அனைவருக்கும் இன்பம் கொடுக்கும் தானே ! அதற்காக ,  நம் கல்லூரியின் தமிழ் மன்றம் சார்பில்      பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட  முடிவு செய்யப்பட்டது. அதற்காக நிறைய போட்டிகளும் கலை  நிகழ்ச்சிகளும்  நடத்த மன்றத்தினர் ,  ஏற்பாடுகளை  தொடங்கினர். ஜனவரி 9  அன்று  மதியம் இரண்டு மணி அளவில் ஹாங்கார்-1   முன்னிருக்கும் இடம் சுத்தம் செய்யப்பட்டு   காகிதத் தோரணங்கள் கட்டப்பட்டன.  அந்தப்  பகுதியே திருவிழா கலை கட்டியது.

 

 

மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலைகளை கவனிக்கத் தொடங்கினர். பொங்கல் வைப்பதற்கான பொருட்களை எடுத்து வைத்த பின்னர் கோலம் போடப்பட்டது.  நான்கு மணியளவில் முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்து மாணவர்கள்   கல்லூரி புலத் தலைவரின் வருகைக்காக  காத்திருந்தனர்.  சுமார் 4:45 மணிக்கு  கல்லூரி  புலத்தலைவர் திரு.தியாகராஜன் அவர்கள்,   முன்னாள் புலத்தலைவர் திரு.ராஜதுரை அவர்கள், விளையாட்டுத்துறை தலைவர் திரு.செல்லதுரை   ஆகியோர்   வருகை   தந்து பொங்கல்  கொண்டாட்டத்தை துவங்கி வைத்தனர்.

 

 

பறை ஒலியோடு சிலம்பத்தின் இன்னோசையும் கலந்து விழா இனிதே தொடங்கியது.பொங்கல் பொங்கி வருவதற்குள் பம்பரம் போட்டி,கரும்பு தின்னும் போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. நடனம், சிலம்பம்  போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.நெருப்புக் கனலை வைத்து ஹர்ஷவர்தன் என்ற இரண்டாம் ஆண்டு மாணவர் செய்த சாகசம் அனைவரது கண்களையும் கவர்ந்தது.பொங்கலோடு சேர்ந்து,அந்த இடத்தில் ஆனந்தமும் பொங்கியது.

கூடிஇருந்த அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டு, நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. முதன்முறையாக நம் கல்லூரியில் நடத்தப்பட்ட பொங்கல் திருவிழா கொண்டாட்டம் இனி ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மன்றத்தால் நடத்தப்படும் என்ற அவர்களின் உறுதிமொழி,பொங்கலைப் போன்றே தித்திப்பாய் இனித்தது.

 

 

இதையியற்றியவர்:

ஆர்த்தி,  இரண்டாம் ஆண்டு,Electronics and Communication Engineering.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *