எதிலே நிம்மதி?

நிம்மதி

வண்டுக்கு தேன் உண்ட பின் நிம்மதி
நதிக்கு கடலில் இணைந்த நிம்மதி
வண்டுக்கு தேன் உண்ட பின் நிம்மதி
நதிக்கு கடலில் இணைந்த  பின் நிம்மதி
கார்மேகத்திற்கு மழையை பொழிந்த பின் நிம்மதி
மழைத்துளிக்கு மண்ணில் கலந்த பின் நிம்மதி

 

Image result for peace images

ஒளிக்கு இருள் நீக்கிய பின் நிம்மதி
ஒலிக்கும் ஓசை இசையான பின் நிம்மதி
காய்க்கு கனியான பின் நிம்மதி
மண்ணில் வாழும் மாந்தர்க்கு
உழைப்பின் பலன் கிடைத்த பின் நிம்மதி
கவலைகள் ஒழிந்த பின் நிம்மதி
வெறுப்புகள், நீங்கிய பின் நிம்மதி
பொறுப்புகள், நிறைவேற்றிய பின் நிம்மதி
மனோரதங்கள் உரு பெறுவதைக் கண்ட பின்
நிம்மதி
இதை வெளியே எங்கும் தேடாமல்
உன் எண்ணங்களுக்கு வெளிச்சம் காட்டு
வாழ்வை வண்ணமாக்கு
உன்னைத் தேடி நிம்மதி வரும்.

 

கவிஞர் அருண் பாலாஜீ , மூன்றாம் ஆண்டு, Electronics and Communication Engineering.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *