கண்ணீரின் காரணம்

 

ஓ வென்று நீ குரல் கொடுக்க,

நின்ற இடத்தில் நான் நடுங்கி போனேன்.

உன் கவலையின் காரணம் அறிய

ஓடி வந்து உன்னைப் பார்த்தேன்.

நீயோ தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாய்!

உன் விம்மல்களின் பொருளறியாது

நானோ குழம்பி நிற்க,

நீயோ உன் கண்ணீரால்

என்னை நித்தமும் நனைத்தாய்.

ஆனால் உன் கண்ணீர் கண்டு பூமி சிரிக்க

அப்போது தான் புரிந்தது

புவியின் புத்துணர்ச்சிக்காக

உன் கண்ணீரைப் பூக்கச் செய்திருக்கிறாய் என…

பிறர் துயர் களைய கொஞ்சமாய் கரைவதில்
தவறில்லை தானே!

 

கவிஞர் ஆர்த்தி. அ.கி.ரா இரண்டாம் ஆண்டு, Electronics and Communication Engineering.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *