ஊழல்

 

 

ஊனமுற்ற சமுதாயம்
உழைப்பை மறந்து
ஊழலை நம்பியது,
சிறுதுளியும் சேர்ந்து
பெருவெள்ளமாக பெருக்கெடுக்க
நாடே நஞ்சாகியது,
தரமில்லா தாவரங்கள்
அரியாசனத்தில் அமர,
வாசமான மலர்கள்
கால்வாயில் கரைகிறது,
சட்டத்தின் எதிரே
கள்வனின் மொழியை
அரசன் ஏற்க
காசோலையே காற்றாகியது,

 

 

நெழிந்த நாட்டை
உயரம் உயர்த்த
நீயே உரமாகு என் தோழா!!!!

 

கவிஞர்: விஸ்வஜித்ஆகாஷ், நான்காம் ஆண்டு, Automobile Department.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *