வேசி

 

உலகே உறங்கையில் உன் விழிகள் விழிக்கும்;

 

உணர்வுற்ற உள்ளங்களுக்கு உன் விருந்து அமிழ்தம்;

 

பாவனைகள் மெருக்கேற்றினாலும் உன் பாதைகள் வலி தாங்கும்;

 

உன் உணவுக்காக உன் உடலே உணவு ஆகும்;

 

துணையற்ற உன்னை பிறர் வினைத் தாக்கும்;

 

உன் தேகம் தோய்ந்தாலும் உன் உயிர் ஏங்கும்;

 

சந்தர்ப்பம் எனச் சாடிய சமுதாயத்துக்கோ,

 

உன்னால் தாகம் தீர்த்துக் கொண்ட சாமானியனுக்கோ ,

 

உன் தியாகம் தெரியுமா?

 

கவிஞர்: விஷ்வஜித் ஆகாஷ், இறுதி ஆண்டு, Automobile engineering

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *