தூக்கம் தெளியாத கண்களுடன்
துள்ளிக் குதித்த இதயங்கள்!
லெக்ட்சர் இல்லை என்றவுடன்
உற்சாகமாக ஊர்சுற்ற திட்டங்கள்!
கண்ணில் ஆர்வத்துடன் கதையடிக்க
– காத்திருக்கும் கவிதைப் பொழுதுகள்!
பசி வந்து ஆட்கொண்ட வேளை
மேஜைக்கடியே திறப்போம் திண்பண்டங்கள்…
வகுப்பின் இறுதி மேஜையின் இம்சை
முதல் மேஜையின் Entertainment ஆக
சத்தமின்றி கனவில் சாதனை செய்யும்
சிகரம் தொட பிறந்தோர் எழ!
மூன்றே விநாடிகளில் முணுமுணுத்தப்படி
காதைக் கடிக்கும் Comments!
ஒலி எழும்பாத ஓசையில்
குலுங்கி குலுங்கி சிந்தும் சிரிப்பு!
புரிந்தும் பாதி புரியாமலும்
கடமைக்காக எழுதும் குறிப்புகள்!
Assignment முடிக்காமல் மாட்டிக்கொண்டு
அசராமல் அலப்பறை செய்யும் ஆனந்தம்!
வெள்ளைப்பலகையை வெறுமையாய் விடாமல்
பெருமைக்காக எழுதும் வாக்கியம்!
என பல சுவாரஸ்யங்களை
சுவாசமாய்க் கொண்ட வகுப்பறை!
கவிஞர்: ஜெயஸ்ரீ, மூன்றாம் ஆண்டு, Computer Technology