ஓட்டம்

ஏன் இத்தனை வேகம்?


உலகம் அழியவா போகிறது?


நில் கவனி செல் எல்லாம்


ஒன்றாம் வகுப்புடன் போய்விட்டது

ஆழ் மனநிலை சீற்றம்


எரிமலையா ? அடைமழையா?


ஏன் கண்களில் ஈரம்?


விடையில்லா விடுகதையா?

வேங்கையின் கால்கள் கொண்டு


நிலங்கள் கடக்கிறாய்


எங்கேயும் நில்லாமல்


உலகை அளக்கிறாய்

சிற்றின்பம் தேடி தேடல்கள் கோடி


வட்டத்தில் சிக்காதே


பிரமாண்ட பிரபஞ்சத்தின் மூலையில் பூமி


கடுகை கடலாக்காதே.

கவிஞர் : பவித்ரா, மூன்றாம் ஆண்டு, EIE.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *