திசை மாறிய நோக்கம்

 

 

நூறு நாட்கள் நடந்தவை எவையும்

 

நகக்கண் மதிப்பும் பெறாத போதே

 

தமக்கென தாமே உள்ளதை                                     உணர்ந்து

 

நரம்பும் சதையுமாய் மண்ணில் மாய்ந்தனர்

 

 

பச்சோந்திப் பறவைகளாய்                                      பிக்பாஸ் மோகம் ஐயோ இதிலென்ன ஐபிஎல் தாகம்

 

துன்பம் நேரினும் திசைதிருப்ப                                ஏதோ-அட

 

தின்னும் சோற்றிலும் விடமுள்ள போலும்.

 

 

பாட்டாளி மக்கள் தன்னுயிர்த் தந்தும்

 

பெற்ற சுதந்திரம் பின்னுயிர் வாங்குமோ?

 

 

தன்வீட்டுப் பொருளை பிறர் தந்ததென்று

 

வெட்கமின்றி வாதிக்கும் தமிழக அரசு!

 

தம்மக்கள் என்றே உணராத வண்ணம்

 

பணம் வாங்கி அழிக்கும் மத்திய அரசு!

 

 

ஏனென்று கேட்க இளைஞர் வந்தால்,

 

கலவரம் தூண்டி உயிரை பறிப்பீரோ

 

கவிஞர்: பரத்வாஜ், இரண்டாம் ஆண்டு, Aerospace Engineering.

 

One thought on “திசை மாறிய நோக்கம்

  • Deep and intense with emotions and thoughts. Good job Bharathwaj and it’s not just a piece of creativity but an inner voice of every responsible citizen. Only a few can articulate it out and you are one among them, no doubt. The verse, “பெற்ற சுதந்திரம் பின்னுயிர் வாங்குமோ?”, touched me. Keep up and keep going. Kudos!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *