செஞ்சிலுவை.. கல்லறை வரை

யார் யாரோவாய்


எங்கிருந்தோ வந்து


ஓரறையில் குழுமி


புதிய அறிமுகங்கள் கிடைக்க


புதன்கிழமைகள்


அறிவின் புதிய விடியல்கள் ஆக


வருகை பதிவில் துவங்கி


வழியனுப்பும் வரை உடனிருக்கும்


மூத்தோரே – நீங்கள் எம் சொந்தங்கள்!


செய்தும் செய்து முடிக்காமலும்


நாங்கள் பங்கேற்ற project review க்கள்


எங்கள் YRC அலப்பறைகள் உச்சக்கட்டம்!

Camp என்று சொன்னவுடன்


ஒதுங்கி ஓடிய பலருக்கிடையில்


தேடி வந்த சிலருக்காக


எல்லா ஏற்பாடுகளும்


எங்கள் மூத்தோர் செய்து வைக்க


வேலைகள் கற்றதைவிட


நாங்கள் இங்கே கற்றுக்கொண்டிருப்பது


வாழ்க்கை பாடங்கள்!

Senior என்று நாங்கள் அழைக்கும் போது


பிறக்கும் பரவசமும்


Junior என்று நீங்கள் அழைக்கும் போது


பூக்கும் புன்னகையும்


வேறெப்போதும் கிடைக்காத


பேரின்பங்கள்!


எத்தனையோ பெயர்களும்


அடைமொழிகளும்


எல்லாருக்கும் இருந்தாலும்


Junior என்ற பெயரும்


YRC’ian என்ற அடைமொழியும்


எங்களோடு இணைந்திருக்கும்


கல்லறை வரை!

– இப்படிக்கு இன்னுமொரு பெருமையான இளவல்.

கவிஞர் : ஆர்த்தி, இரண்டாம் ஆண்டு, ECE.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *