மனதிற்குள் மணம் – கவிதை(அ)ன்பின் இலக்கணம் கண்டவளோ!!


(ஆ)ருயிர்த் தோழியாய் வந்தவளோ!!


(இ)தயத்தில் இமையாய் இமைப்பவளோ!!


(ஈ)ன்றெடுத்த தாயாய் இணைந்தவளோ!!


(உ)றவுக்கு உயிர் ஊட்டியவளோ!!


(ஊ)டலுக்கு இன்பம் பயிர்த்தவளோ!!


(எ)ம் காதலுக்கு ஓவியமானவளோ!!


(ஏ)ட்டில் எழுதாச் சித்திரமானவளோ!!


(ஐ)யம் விலகி வந்தடைந்தவளோ!!


(ஒ)ளிக்கும் சித்திரைத் திங்களுமானவளோ!!


(ஓ)ரக்கண்ணில் என்னை மாய்த்தவளோ!!


(ஔ)டதம் தந்துச் சென்றவளோ!!

 கவிஞர்: மணிகண்டன், இறுதி ஆண்டு, Information Technology.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *