நூலிழை காதல் – கவிதை

தூக்கி வீசிய உடையும்கு
ழாய்த்துளையில் வெளியேறிய நீர்வெ
ந்நீரை விலாவ, ஆவி என்னுள்
புகுந்து நான் உயிர்பெற; மீண்டும்
துயில்கொளென இளங்கதிரவன்
தூசியால் தாலாட்ட, மங்கிய பார்வை
தெளிவுபட;


கரும்பொலிவுற்ற மேனியவள்
என்முன் வெற்றுடலுடன் நிற்க ,
இல்லாத இதயத்தில் அவள் தேகம் வரைய
ஏங்குகையில், ஜன்னல் வழியே
சூரியன் மோகத்தால் செம்மை விட்டு
மஞ்சள் நிறம் புக; வெடித்தது போர்,
எம்மூவருகிடையில்: அவளோ,
நீரை அள்ளி குளிக்க,
தேகம்பட்டு தெறித்த துளிகள்க
ணைகளாய் என்னை துளையிட,வியர்வை வழித்து வழியும்
என் பகைவனோ, திரவியங்கள்
காட்டிலும் வாசமுற்று திளைக்க,
தன் கூந்தலருவியை தாங்கும்
வளைவுகளை, நுனிபாதம்
மூச்சயர்ந்து வெடித்து;


அவள் குளியலழகை அவளது
ஆடைகளின் நடுவே ஒளிந்து ரசிக்க;
இறுதியில்,எம்மை இழுத்து
எச்சில் படா முத்தமொன்று இட்டு,
ஈரம் காய அவள் உடற்போத்தி
என்னுயிர் இறுகி போக,
மற்றுமோர் ஜென்மத்திலும்
“துண்டாக” பிறப்பேனோ?

கவிஞர்: தினேஷ் மணி,
மூன்றாம் ஆண்டு, Automobile Engineering.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *