மழை – கவிதை

 

மழையின் தோல்வியோ!


சுடரொளியால் விண்ணுயர் அடைந்தும் நினது


சீரிய உயர்வினை போற்றினார் அல்லர்


விண்ணுயர் அடைந்து அங்கே நிலைத்தவுன்


வியத்தகு தூய்மையை வாழ்த்தினார் அல்லர்


கலங்கியே நீயும் இன்று மண்ணுலகத்து


கரைந்தே வீழ்ந்தாய்; ஐயோ! மனங்குன்றிய


மானுடமே! உயர்வு புகழாநின் மனமின்று


மண்ணில் வீழ்ந்தோன் வீழ்ச்சியை வாழ்த்துவதோ?


வஞ்சம் கொண்டோரே வையத்தார் இவரை


என்னென்று தூற்றுவென் தூவும் மழையே!

 

கவிஞர்: சாய் சுதர்சன், முதலாம் ஆண்டு, Automobile Engineering.

 

 

One thought on “மழை – கவிதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *