நம் பயணம் – கவிதை

  

பயணங்கள் யாவும்
இனிதாய் அமைவதில்லை
முடிவில்லா மார்க்கங்களும்
திசையற்ற பாலைவனங்களும்
பரந்து விரிந்த ஆழ்கடல்களும்
வெறுமையான இரவுகளும்
இருள் சூழ்ந்த பகல்களும்
மனிதம் மறந்த முகங்களும்
உணவில்லாத உறக்கங்களும்
எனக்காக காத்திருக்கலாம்…
ஆனால் நட்பே
உன் ஒற்றை பார்வை போதும்
கேள்வியின்றி புறப்படுவேன் நான்
வாழ்க்கை என்னும் பயணத்திற்கு…

 

கவிதையை தொகுத்தவர்: அகிரா, முதலாம் ஆண்டு Electronics and Communication.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *