வலியோசை – கவிதை

 

அர்த்தமற்ற அதிகார ஆதிக்க வெறியிங்கே..


நீர் மீன் பிழைக்குதே வெளிமேல்!


ஊர் வஞ்சம் உரைக்குதே ‘நீ கீழ் நான் மேல்’!


தனியொவ்வொரு ஜீவிதம் தவிக்குதே!


உணர்தருணம் வாராதோ இழிநனைந்த இப்புவிக்குள்…. !?


பாவம் பெரும்பாவம் இழைத்திருக்குமோ


பாசாங்கறியா உருண்டை கோளம்..


மாரீசமனிதர்களைத் தாங்கி தவிக்கும்


துர்நிலை எய்தி துக்கம் தைத்துக்கொண்டதே!


என் பாரதி இன்று இச்சகதியில் புகல் கொண்டு
வாழ்ந்திருந்தால்…


முகில்களும் முறைத்துக்கொண்டு நீலி நீர்


வடிக்கும் போலியின் அவலம் கண்டஞ்சி


தற்கொலை எண்ணம் ஓங்கவே ..


அமிலம் அருந்தி இத்தரங்கெட்ட தரணியை


விட்டுத் தடதடவென ஓடியிருப்பான்!


‘வண்மை செய்’ என்னும் பாரதியின்


குரல் வலியோசையை நல்லறமற்ற செவிகள்,


‘வன்மம் செய்’ என கண்டனவோ !!!


இருமையே கொண்டாடும் வர்ணமாகத்


திரண்டு திரண்டு கசப்பு தித்திக்க தித்திக்க


உயிர் ஊசலாடுகிறதே கூத்தாடும் வலியோசை யதனை இசைத்துக் கொண்டே !.

 கவிதையை தொகுத்தவர் : கவியரசி , முதலாம் ஆண்டு Electronics and Communication.

One thought on “வலியோசை – கவிதை

  • “கவி அரசி” இக்கவிதையினால் பாரதி கண்ட எம்மாநிலத்தில் புரட்சி தீ பரவட்டும் …… Great da ammu … I expected, this is Kavi … Yarkitaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *