மோகப்பனி – கவிதை

  

பேனாக்கள் எல்லாம்,
மூடிகளின்றி இருந்துவிட்டால்,
மையானது தேவையற்று வடிந்து
விரைவில் குப்பையை சேரலாகும்.
அதுபோலன்றி,
விலங்காகாது; மனிதனாய்
கொந்தளிக்கும் காமத்தை
தக்கதகுந்த இடங்களில்
வெளிப்பட பழகு.
வானவில்லின் வர்ண ஜாலத்தில்,
கண்ணால் வயப்படுவது இயல்பாயினும்;
உடற்தோலில் மயங்கி உணர்வுகளின் வீரியத்தால்,
மதியை இழக்கலாமா?
துளிகளை தேக்காது
வெள்ளமாக பாயவிட்டு,
நீராக வீணடிக்காமல்;
மோகமென்னும் அரிய வரத்தை
அணையிட்டு பாய்ச்சல்கொள்!

 

கவிதையை தொகுத்தவர் : தினேஷ் மணி , மூன்றாம் ஆண்டு Automobile Engineering

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *