பாற்கடல் நடுவினிலே,
கன்னியாகுமரியிலே,
அனாதை பிணமாய் மிதந்தான் கண்ணீரிலே;
சிங்களன் சித்ரவதை,
ஐயோ பெரும் வேதனை;
மானம் கெட்ட தமிழன் மனதினிலே,
சல்லிக்கட்டின் பெருமை ஓயலே;
சொந்த நாட்டு கடற்படையின்,
விளையாட்டு பொம்மையாய்,
தமிழக அடிமை அரசின் அலட்சியமாய்;
நம் உயிர் காக்க வந்த போது தமிழன் பெருமையாய்,
போராடிய காரணத்தாலே,
கிறிஸ்துவனாய்;
பெற்ற பிள்ளையாய் தாயின் கொடுமையை
தாங்க முடியாமல்,
மாற்றான் தாயை தேடி அழுகிறான்!
யார் பெற்ற பிள்ளையோ!
கவிதையை தொகுத்தவர் : ஷாஹுல் ஹமீது , மூன்றாம் ஆண்டு Automobile Engineering