முட்கள் பூத்த பெண் ரோஜா-கவிதை

நட்பின் ஊடே புரிதல் அற்றுப் போனதால் ஏற்பட்ட பிரிவின் வலியைத் தாங்காது குமுறி அழுகும் ஒரு வயது குழந்தையைத் தேற்ற முற்பட்ட போது அப்பிஞ்சு குழந்தையின் மழலை மொழியில் என் செவிக்கு எட்டிய சிலவற்றின் பதிவு…. 

அன்பிற்கினிய நீயும்,இளநங்கையென பூச்சொறியும்


என் வீட்டு ரோஜாவும் ஒன்று தானோ??


தண்மை கலந்து தனிமை விரட்டும்


தாய்மை கனிந்த நின் மனம் போலே


பனி தங்கிய மெல்லிதழோடு இளநகை தவழ


எனை ஈர்க்கிறதே என் தோட்டத்து ரோஜா!


பிரிதலொன்றே வழியென வீரிட்டுச் செல்கிறாய் நீ!


புரிதல் வேண்டுமென தடையாகி நிற்கிறேன் நான்!


என் விழி அறிய அவா கொண்ட உண்மையை


உன் மனம் இயம்ப ஏங்கும் மெய்மைதனை


என் மனம் உணராது தடுக்கிறாய் பல காரணிகள்


நெடுதுயர் அரணாய் அமைய…….


மெல்லிதழ் மென்மையுணர என் பிஞ்சு கரங்களுக்கு


தடை போடுகிறது நான் வளர்த்த ரோஜா முற்கள்!


உண்மையுணர விழைந்த கூரிய விழிகள் சோர்வுற்று தவிக்கிறதே


பல காரணா அரண்களைக் கடந்தும்


புதிதுபுதிதாய் தழைத்து நிற்கும் காரணிகள் கண்டு!


மெல்லிதழைத் தொட்டணைக்கத்துள்ளும் பிஞ்சு கரத்தைத்


தன்னோடு அணைத்துக் கொள்கிறது முது பிராயத்து முற்கள்…


தாய்மைக்கினிய அவற்றின் பாசத்தை செங்குரிதியென வடித்துச்செல்லும்


என் பிஞ்சு கரங்களோடு விளையாடி மகிழ்கிறது பிஞ்சு முற்கள்!


உன் மனமறிய விழைந்த விழிகளுக்குத் தடை அமைக்கும் காரணிகளின்;


மெல்லிதழ் தவழாது என் பிஞ்சு கரங்களைச்


செம்மை சூழத் தவழ்ந்து நிற்கும் முற்களின் வஞ்சனையையெண்ணி பிஞ்சு கன்னம் மேலே உருண்டோடிக் குளுமை பயக்கிறது கண்ணீர்…..


காரணா அரண்களுக்கும் ரோஜா முற்களுக்கும் தண்ணீர் ஊற்றி வளர்த்தது


நான் தான் என்று அறியாத பேதை மனம்..


முதுமை முற்றினும் முடிவில்லை என்றெண்ணிய தோழமை


நாமூன்று திங்களில் முறிந்து செல்கிறது ….


உண்மை அறிந்தும் பொய்க்காதோ என்ற ஏக்கத்தில் குளமாகிக் குளிர்கிறதே


என் செம்மை தாங்கிய விழிகள்!!


புரிந்து கொள்ள மொழியுமில்லை


தேற்றிச்செல்ல ஒருவருமில்லை


பிரிவு காண வன்மையற்றுப் போனதால் தனிமையே தஞ்சமென மௌனித்து துடிக்கிறது பேதை மனம்….

 

கவிஞர்: இல.மணிராஜ் , இரண்டாம் ஆண்டு, Electronics and Instrumentation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *