செங்குருதியும் பரிதியாய் சுட்டெரித்து வெகுண்டு எழ
கையறு நிலை தனை ஏற்குமோ நெஞ்சம் ?
வீறு கொண்ட வேங்கை
அதை வெட்டி சாய்த்த வல்லவனும்
ஒரு நாள் வல்லாறு பிடியில் சிக்கிய கதையென
உடன் பயணித்த நய வஞ்சகர்கள்
பிடறி கீழ் குற்றிக் கிழித்த
காயங்களைத் தொடுகையிலே
வலியால் துடிப்பது இதயமல்லவா?
என் சொல்லித் தேற்றுவேன்
துரோக கனலில் தீய்ந்த அகத்தை
காலதேவனின் கண்கள்
கயவர்களைத் தீண்டாதோ ?
பொய் கூறிய சர்ப்ப நாவினை
வினைப்பயன் வெட்டி சாய்க்காதோ ?
செஞ்சோற்று கடனால் அன்று
மாண்டான் கர்ணன்
கண்மூடித்தனமாக நம்பியதால் இன்று
வீழ்ந்தேன் நான்.
– தூரிகை(புனைப்பெயர் )
-பெயர் சொல்ல விரும்பாத கவிஞர்