பாரதம் எதை நோக்கி? – பாகம் 4

 

ஆதி அந்தமில்லா வட்டமெனத் தன் வாழ்க்கையை வடிக்கவிருந்த நம் பாரதத்தாயின் மக்களைச் சட்டமெனும் வேலியிட்டு அன்று நல்வழிப்படுத்தினர் நம் முன்னோர்… ஆனால் இன்றோ அச்சட்டமே நமக்கு எதிராகி விடும் போலுள்ளது… ஆம்… அக்காலத்திற்கென இயற்றப்பட்ட சட்டங்களை இன்னமும் வைத்துக் கொண்டு “we are all under the constitution” என்று கூப்பாடு போடுவதில் என்ன பயன்?

 

பிறகு பாகுபலி கதை தான் இங்கும்… “இதுவே என் கட்டளை! என் கட்டளையே சாசனம்!…” கன்னிக்கும் நீதி கிடைக்காது… கயவர்களின் காலமும் முடியாது… தவறு என்றால் திருத்தம் அவசியமாகிறதல்லவா? கேட்கிறேன்… அம்பேத்கர் அவர்களுக்குப் பிறகு இந்நாட்டில் அநியாயங்களை அறுத்தெறியும் வகையில் சட்டங்களை இயற்ற சட்டவல்லுனர்கள் பிறக்கவே இல்லையோ? மன்னிக்க வேண்டும்… “சட்டங்களைப் பற்றி உனக்கு என்னத் தெரியும் ?” என்று என்னை நோக்கி மிதியடிகள் புறப்படலாம்… உண்மையை ஒப்புக் கொள்கிறேன்.எனக்கு சட்டங்கள் பற்றி ஒன்றும் தெரியாது… சட்டங்கள் பற்றி அறியா இச்சிறுவனுக்கு உதவ ஏன் சட்டக் கல்வியைக் கட்டாயமாக்கக் கூடாது… அப்படி செய்தால் சு(யலாப)தந்திரத்தில் ஏதேனும் குறை ஏற்படக் கூடுமோ?

 

 

Image result for justice photography

 

 

சாமானியனுக்கும் சட்டம் தெரிந்தால் நாடு சாக்கடையாகி விடுமா? இல்லை… மாபெரும் சக்தி ஆகிவிடுமா? நான் அரசிற்கு எதிராகப் புரட்சியும் செய்யவில்லை… போர் கொடியும் ஏந்தவில்லை… நான், புதைந்த வரலாற்றில் எங்கோ சிதைந்துக் கொண்டிருக்கும் சம்பவங்களை மட்டுமே அலசி அவர் செய்தது குற்றம் இவர் செய்தது குற்றம்… அவர்வழி வந்தவர்கள் அப்படித்தான்… இவர்வழி வந்தவர்கள் இப்படித்தான்… அவர்களை எதிர்த்தால், அழித்தால் நாடு செழிக்கும் என்று கூறும் ஒரு சாராரின் சந்ததியும் அல்ல… அவர்களை நோக்கிக் கேட்கிறேன்… சகதிகளை மட்டுமே ஆராயும் நோக்கோடு புறப்பட்டீரோ? வரலாறு என்பது எதற்கு என்று தெரியவில்லை… நல்லவர்கள் கையாண்ட நல்வழிகளைக் கொண்டு தீயவர்களின் தந்திரங்களைத் தகர்த்தெறிந்து வீட்டையும் நாட்டையும் செம்மைப் படுத்துவதற்கே ‘வரலாறு’ எனக் காண்கிறேன்… அது குற்றம் இது குற்றம் என்று ஆர்ப்பரித்துக் கொண்டல்லவா இருக்கிறீர்கள்… வாசகர்களே நீங்கள் சொல்லுங்கள் சில உண்மைகள் மறைக்கப்படுவது சரியா? தவறா? எங்கோ தொடங்கி எங்கோ சென்று விட்டோமல்லவா… சட்டங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தோமல்லவா… நான் கூற விழைவது சட்டங்கள் மாற்றப்பட்டால் மட்டும் முழுமையானத் தீர்வு கிடைக்குமா என்பதைப் பற்றித்தான்… அடுத்த பதிவில் காண்போம்…

 

 

முந்தைய அத்தியாயத்தை இங்கே படியுங்கள்: பாரதம் எதை நோக்கி ? – பாகம் 3

 

இயற்றியவர் : மூன்றாம்  ஆண்டு CT  மாணவர் திரு.விக்னேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *