வீழ்ச்சி இனியில்லை! -கவிதை

 

முடியாது என்பதை
முடக்கிவிட பார்.
அவ்வாறு நினைத்திருந்தால்
தேநீர் ஆற்றுபவரது முதுமை
பலரது வாழ்வை நிர்ணயித்திருக்காது.
சிறுதுளி தாங்காத கண்ணின்
குழியாக இராது; வெள்ளத்தையும்
உள்வாங்கும் கடலாக
சோதனைகளை எதிர்கொள்!
துவண்டுவிழும் நேரம்தனில்,
உன்னை வெளியேற்றியபோது
‘அவள்’ சிரித்த ஓசையின்
தன்மையை நினைவுகூரு.
நீரற்று உலர்ந்த இலைகளே
தீயாக கொழுந்துவிட்டு
வாய்ப்பளிக்க மறுத்த
கானகத்தை சாம்பலாக்கும்.

கவிஞர்:ம.தினேஷ், மூன்றாம் ஆண்டு  ,Automobile Engineering.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *