மறந்தோமா மனிதத்தை?

 

கடந்து போகும் நாட்கள்
களவு போகும் தருணங்கள்
உணர்ச்சி பெருக்கில் கட்டுண்டு
கைதியான மானுடர்கள்

கிழிந்து போகும் நாள்காட்டி பக்கங்கள்
உருண்டு ஓடும் தினசரி நிகழ்வுகள்
கண்மூடி திறப்பதற்குள் நிகழ்காலம்
கருப்பு வெள்ளை ஞாபகங்கள்

நிற்க நேரமின்றி ஓட்டங்கள்
தலைகால் புரியாமல் ஆட்டங்கள்
நதி நீரில் மிதக்கும் பலகைகள் போல்
குறிக்கோல் புரியாத வாழ்க்கைகள்

இருபதாயிரம் நாட்களுக்கு
எண்பதாயிரம் கனவுகள்
கையறு நிலைகளில் சில நேரம்
கசிந்து விழும் கண்ணீர் துளிகள்

மனிதம் என்றால் என்ன ?
என்று கேள்வி எழுப்பும் எதிர்காலங்கள்
பணம் பார்க்கச் சொல்லித்தரும் கல்விகள்
வழிநெறிகளை சொல்லித்தர மறந்த நேரங்கள்

பணங்காசு ஆதாயம் தேடி பழகும் சில மக்கள்
சமுதாயக் கூண்டுக் கிளிகளாய் சில மக்கள்
சகுனியை மிஞ்சும் அளவிற்கு தாயம் உருட்டி ஆடு(ளு)ம் சில வித்தகர்கள்

எத்தனை எத்தனை மனிதர்கள்
எத்தனை எத்தனை நிகழ்வுகள்
ஒவ்வொரு வினாடிக்கும் காற்றின் மிசையிலே
எழுதப்படும் ஆயிரம் கோடி சரித்திரங்கள்.

 

கவிஞர் : க. பவித்ரா ,இரண்டாம்  ஆண்டு Electronics and Instrumentation.