ஜனநாயகத்தில் அரங்கேறும் ஒரு சில நிகழ்வுகளை அரை பக்கத்தில் அடைத்து விட ஒரு எண்ணம் …. உணர்ச்சிகளும் எண்ணங்களுமே நம்மை ,நம்மில் ஊடுருவி ஆள்கின்றன என்பேன் . உணர்ச்சிகளைக் கட்டுக்குள் அடக்கும் வித்தையே நாயையும் நரனையும் வேறுபடுத்தி நிற்கச் செய்கின்றன . இரண்டாம் பதிவில் நாட்டில் நடந்தேறும் சம்பவங்கள் என்று குறப்பிட்டிருந்தேன் …. ஆம் கடவுளுக்கு இணையென நம் கலாச்சாரம் கருதும் கன்னியின் கற்பை அவளின் பலவீனம் எனக் கருதும் காமுகர்ளின் அருஞ்செயல்களைப் பற்றியே கூற விழைகிறேன் . உணர்ச்சிகளைச் சற்றே ஓரம் கட்டுவோம் … ஒன்றாகி நிற்கும் ஏதோ ஒரு சக்தியை எட்ட முயல்வோம் .கயவர்கள் ஒன்றை மறந்துவிட்டனர் , யாவரும் தாய் வழி வந்தவர்களேயன்றி வானிலிருந்து எட்டி குதித்தவர்கள் அல்லரே; பிரசவத்தில் துடிக்கும் ஒரு பெண்ணின் கதறலை உணர்வோர் எவரும் இந்த செயலை ஏற்கமாட்டார் .14 பேர் கொண்ட கூட்டம் இரண்டு பெண்களை வழிமறித்துத் தகாத செயல்களில் ஈடுபட்டதை அறிவோம் . எடுத்துக்காட்டிற்கு ஏன் அலைவானேன் … நாள்தோறும் வரும் நாளிதழ்களே சாட்சி. மாறவேண்டியன் யார் தனிமனிதன் தானே ? தன் கண்ணாலேயே கன்னியவளின் கற்பைத் தீண்ட எண்ணும் காமுகன் இருக்கும் வரையிலும் , அக்கயவனைக் கழுவிலேற்றும் வரையிலும் கற்பழிப்புகள் குறையாது . மனிதர் மனம் மாற monarchy வந்தால் கூட பரவாயில்லை என எண்ணும் சாராரின் குரலாக நான், மற்றொன்றையும் கூறியாக வேண்டும் , பெண் சுதந்திரம் என்ற பெயரில் அதனை தவறாகப் பயன்படுத்துவோரும் உள்ளனர் என்பதை மறுக்கமுடியாது .
திகாலத்தில் இருந்து அழியாத சொத்தாக நம்மிடம் நிலைத்து நிற்பது ஏற்ற தாழ்வு நிறைந்த சமூகமே . ஆலயத்தின் முன்பு அனாதைகளென வாழ்பவர்களின் வாழ்வு முன்னேறிய பாடில்லையே ; கோடி கோடியாய் சம்பாதிக்கும் கோயில்களின் முன்பு கையேந்துவோர் வாழ்வில் இன்னும் கலங்கரை விளக்கம் தென்படவில்லையே ; குடம் குடமாய் பால் அபிஷேகம் நடத்தும் கோவில்களின் முன்னால் தானே பட்டினியால் பரிதவிக்கும் பிள்ளைகளின் அழுகுரல் ; திருநங்கைகளின் வேதனையும் ஒரு பக்கம் ; கைகளைத் தட்டிய வண்ணம் வாழ்க்கையின் கரையைக் கடந்துவிடலாம் என்ற எண்ணமா அவர்களுக்கு ? ஒரு நாளும் இல்லை …. வாழ்க்கைத்தரம் உயரக் காணாத இவர்களின் நிலைக்குக் காரணம் யாரோ ? பொன்னான தன் மேனியைப் பணம் ஈட்ட உதவும் பொருளாக மாற்றியது யார் செய்த குற்றம் ? இப்படி எண்ணற்ற நிகழ்வுகள் நம் நாட்டில் … மனிதம் அழிந்துகொண்டிருக்கிறதா ? அல்லது மடமையில் திழைத்திருக்கிறதா ?
மயங்கிய நிலையிலேயே மாண்டுகொண்டிருக்கிறோமோ ? குற்றமிழைத்தவர் யாரோ தெரியாது ஆனால் குறை நீங்க ஆயுதம் எடுப்போர் நாமாக இருக்கலாமே….
படியுங்கள் : பாரதம் எதை நோக்கி -பாகம் 2
இயற்றியவர் : மூன்றாம் ஆண்டு CT மாணவர் திரு.விக்னேஷ்