ஜீவநீர்

 

 

 

ஒரு ஞாயிறு பொழுதில்
சலனமின்றி தகிக்கும் அனலி
வியர்வை துளிகளென கன்னத்தைக்கடக்க
உலர்ந்த உதடுகள்
ஒரு முத்தமேனும் உதிர்க்க உலாவுதே…
தாகம் தணிக்க அவளுமில்லை
வாழ்ந்து இனிக்க நெஞ்சமுமில்லை
எனினும் என்ற சொல்லே
ஒரு அடி எடுத்து வைக்க
கவிழ்ந்த கண்களும் ஒடிந்த மனதும்
எனை இழுத்துப்பிடிக்க
கதிரென வியாபிக்கிறாள் எங்குமவள்
ஒளியே சுவாசமென நகர்கிறேன்…
உச்சி தொடும் நேரம்
எனக்கும் சூரியனுக்கும்
ஒரு அங்குல இடைவெளி போல்
வெப்பம் கடலென கனக்கிறது.
நிழலே பயந்தோடி பாதமடியில் ஒளிய
காணலே கரைந்து போகும்
வெய்யில் மழை அது …
உஷ்ணம் நிரம்பி வழியும்
ஒரு குளத்தோர மரத்தின் கீழே
உயிருக்கு அவதியுற்றிருக்கிறாள்
மரத்தின் மடி சாய
காற்றின் கரம் பிடித்து
ராட்டினம் சுழன்றபடி
பூமி இறங்கும் ஒற்றைப்பூவிதழ்
அவள் முகம் தொட
கலங்கிப்போன அவளை
என் கைகளினுள் அணைத்து
ஒரு மெல்லிய முத்தம் பதிக்கிறேன்
ஜீவநீரென அவள் .

 

கவிஞர்: சுவாதி , மூன்றாம்  ஆண்டு வானியல் (Aerospace) துறை.

 

⁠⁠⁠⁠⁠தமிழ் மொழியாக்கம்:  பிரசன்னா வெங்கடேஷ்.