வாழ்வா சாவா நிலை.
அச்சம் அசுர பலத்தோடு என்னை
எட்டி உதைக்க பலவீனமான
உடல் எளிதில் தவறி விழ….
உடல் சற்று நேரம்
கழித்து மேலே எழ….
மீண்டும் உதைக்கும் அச்சம்…
அழிவின் அச்சம்….
அழிந்தாலும் பரவாயில்லை என்று போரிடலாமா???? அச்சம் அதையும்
அழிக்கும் மகா பலசாலி
உதவி புரிய வரும் அன்புள்ளங்களையும்
அழிக்கும் வல்லமை வாய்ந்த
அசுர பலம் வாய்ந்த இவ்வரக்கனை
போரிட்டு வென்றாலும் மீண்டு எழுந்து
ஏளனமாய் சிரித்து என் பலத்தை
உரிந்து மகிழ்கிறது……
இதற்கு இவ்வளவு பலத்தைக்
கொடுத்தது யார் என்று கேட்டேன்….
என்னைப் பார்த்து என் படைப்பு
சிரித்தது…. என் பிழைப்பு சிரித்தது…
மீண்டும் மீண்டும் போரிடுவோமாக
ஓர் வட்டத்தில்
கவிஞர்: கு.கிஷோர் மின் அணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் பொறியியல். இரண்டாம் ஆண்டு.