வாழ்த்து பாடல்

 

கஜமுக விக்னேஷ்வரா
எம்மை காக்க ஓடி வா
ஏக்கதந்த ஞான பண்டிதா
அரவணைப்பாய் கணேஷ்வரா

முடிவில்லா விண் ஆளும் முதற் பொருள் நீயே
கையிலாய நாதனின் தலைப் பிள்ளையாரே
தினம் போற்றும் அடியோரின் தடங்கல்கள் நீக்க
மூஷிகன் மீதேறி அருள் தருவாயே

இத்திருநாளில் உன்னைப் போற்றும் எளியோர்கள் நாங்கள்
எந்நாளும் இதைத் தவறாமல் செய்திடுவோமே
வக்ரதுந்த ஓம் சித்தி விநாயகா – உன்தன்
அருள் சேவடி தினம் நாடி வருவோமே.

 

கவிஞர் : க. பவித்ரா ,இரண்டாம்  ஆண்டு Electronics and Instrumentation.