ஓர் விவசாயின் குமுறல்

ஊருக்கே சோறுபோட்ட இனம் என்ற பெருமையை மட்டும் வைத்துக்கொண்டு உண்ணும் ஒருவேளை உணவுக்கும் வழி இழந்தோம்.நகரமயமாக்கலுக்காக காடுகளை அழித்தார்கள்.விவசாய நிலங்களை எல்லாம் வீட்டுமனைகளாக்கினார்கள்.ஆறுகளை
எங்கே போவோம் நாங்கள்:

 

 

 

பல்லாயிரம் கனவுகளுடன்(சில ஆயிரம் கடனுடன்) சித்திரை முதல் நாள் ஏர் பூட்டி உழவோட்டி மழைக்காக மருகி காத்திருந்து ஆடி பட்டம் தேடி விதைத்து ஆவணியில் உரமூட்டி,அடிக்கடி களையெடுத்து நீருக்காக ஏங்கி நிற்கையில் கார்த்திகையில் மழையடிக்க கனமாய் இருந்த மனம் மண்வாசக்காற்றிலே லேசாக.பயிரை ஓர் அடி வளர்ப்பதற்குள் உயிரை வைத்துப் போராடி மார்கழியில் அறுவடை செய்வதற்குள் ஆயிரம் துயர்.கதிரடித்து நெல்லாக்குகையில் ஓர் பிள்ளையை ஈன்ற பேருவகை கொண்டோம்.விளைந்த நெல்லை விற்பதற்குள் படும்பாடு பெரும்பாடானது.ஊரிலுள்ள ஒவ்வொருவரும் அவனவன் பொருளுக்கு அவனவன் விலைவைக்க உணவளிக்க உழைத்த உழவனான நான் விளைவித்த பொருளுக்கு(என் உயிருக்கு) வேறொருவன்  விலை விதிக்க வேதனையுடன் இருந்த மனதில் வேல் வந்து இறங்கியது. கடன் தள்ளுபடி கேட்டோம்,நீதிமான்கள் மறுத்தார்கள்.நிவாரணம் கேட்டு போராடினோம்,நிர்வாணமாக ஓடவிட்டாகள்.அரசுக்கோ புரியவில்லை நாங்கள் சோற்றுக்கு வழியில்லாமல் போராடவில்லை,சோறு போட வழியில்லாததால் தான் போராடினோம் என்று.ஒரு மாநில அரசோ ஒரு படி மேலே சென்று ஆறு விவசாயிகளை சுட்டுக் கொன்றது.இறந்தவன் குடும்பத்திற்கு சில லட்சம் கொடுத்தால் போன உயிர் மீண்டு விடுமா?எத்தனை அவலங்கள் நிகழ்ந்தாலும் விவசாயம் செய்வதை மட்டும் ஒருபோதும் கைவிட மாட்டோம்.

 

 
ஓர் விவசாயியின் வேதனையை விவசாயியின் குரலாக பார்த்தோம்.அதனை மாற்றுவதற்கான சில வழிமுறைகளை காண்போம்.

 

 
*ஒவ்வொரு வருடமும் நமக்கான நீரை பெறுவதற்குள் நம் அண்டை மாநிலங்களுடன் போராட வேண்டியுள்ளது.அவ்வாறு பெறுகின்ற நீரை வீணாகக் கடலில் கலக்கவிடாமல் உரிய தடுப்பணைகள் கட்டி கடை மடை பகுதிகள் வரை பாசனம் செய்ய வழிவகுக்க வேண்டும்.
*பயிர் காப்பீட்டு திட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே மாணவர்கள், தன்னார்வலர்கள் மூலம் ஏற்படுத்தவேண்டும்.
*விளைவித்த பொருளுக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்க வழி செய்ய வேண்டும்.
*ஆற்று மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். ஏரி,குளங்களை முறைகேடு இல்லாமல் உரிய காலங்களில் தூர்வார வேண்டும்.
*செயற்கை முறையை தவிர்த்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசு ஓர் திட்டம் தொடங்கவேண்டும்.அத்திட்டதிற்கு வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் பெயர் சூட்டப்பட வேண்டும்.

 

ஒரு மருத்துவர் தன் மகனை மருத்துவனாக்க விரும்புகிறார். ஓர் வழக்கறிஞர் தன் மகனை வழக்கறிஞராக்க விரும்புகிறார். ஆனால் எந்த ஓர் உழவரும் தன் மகனை உழவனாக்க விரும்புதல் இல்லை.இந்த நிலை மாற வேண்டும். விவசாயிகள் போற்றப்பட வேண்டும். விவசாயம் காக்கப்பட வேண்டும்.
வாழ்க பாரதம்!
வளர்க தமிழகம்!!
வந்தே மாதரம்!!!

 

இயற்றியவர் : Rpt இரண்டாம் ஆண்டு மாணவர் திரு.மனோஜ் குமார்.