மாலை மர்மங்கள் – அத்தியாயம் 11

 

இதுவரை:

தொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா கொல்லப்படுகிறார். துப்பறிவாளர் சதுர் நாத்திடம் வழக்கு வழங்கப்படுகிறது. சுதாவின் குடும்பத்தினரை முதலில் விசாரிக்கிறார் சுதாவின் வீட்டில் ஓர் கத்தியும் சுதா ஓர் ஆடவனுடன் இருக்கும் புகைப்படமும் கிடைக்கின்றன. ஷ்ரவனின் நண்பன் செம்பியன் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிப்படுகிறது. சதுரின் மனைவி காயத்ரி அவனிடமிருந்து வழக்கு பற்றிய தகவல்களை அறிந்த பின் சுதாவின் நண்பர்களிடம் விசாரிக்க அறிவுறுத்துகிறாள். சுதாவின் தோழி சாவித்ரி மூலமாய் சுதாவின் முன்னாள் காதலன் ஸ்ரீனிவாஸ் பற்றிய தகவல் கிடைக்கிறது. சதுர் அவனைச் சந்திக்க பெங்களூர் செல்கிறார். அங்கே ஸ்ரீனிவாஸின் மனைவி மாதவி அதிர்ச்சிமிக்க தகவல்களைக் கூறுகிறாள்.  

 

 

அத்தியாயம் 11:

 

அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்தவுடன், சதுர் சென்னைக்குப் புறப்பட்டார்.
அட! அதற்கு முன்பு நம் கதாநாயகனுக்கு மற்றொரு வேலை மீதி உள்ளதே!
ஒரு எஸ்.டீ.டி பூத்(STD Booth)இல் இருந்து தன் மனைவிக்குப் ஃபோன்(phone) போட்டார்.
“ஹலோ” என்று மறுபுறம் குரல் கேட்டது. அவளது இனிய குரல் அவர் உயிருடன் இருக்க போதுமான காரணம் இருந்தது.

 

 

“காயு … சதுர் பேசுகிறேன்” என்றார் அவர்.

 

 

“சதுர்! என்ன நடந்தது? எல்லாம் நலம் தானே?”

 

 

“ஆமாம். நான் மாதவியைப் பார்த்தேன் ”

 

 

“எல்லாம் என்னைப் பார்ததால் அடித்த அதிர்ஷ்டம்.” சதுர் உள்ளுக்குள் நகைத்தார். “வழக்கு முடிவடைந்ததா?”

 

 

“இல்லை காயூ. அவள் சுதாவைக் கொல்லவில்லை. அவள் சென்றபின் யாரோ ஒருவர் அங்கு வந்ததாகச் சொன்னாள்” என்று அலுப்புடன் கூறினார்.

 

 

“யார் அது? இந்த வழக்கு ஒருபோதும் முடிவடையாதது போல் தெரிகிறது” என்று அவள் கவலையோடு கூறினாள்.

 

 

“நான் அந்த கொலையாளியை நெருங்கி விட்டேன். நான் விரைவில் இந்த வழக்கை முடிப்பேன். நான் இப்போது திரும்பி வருகிறேன். எப்படி இருக்கிறாய்? நீ சாப்பிட்டாயா? வயிறு வலிக்கிறதா? லேசான அறிகுறிகள் இருந்தால் கூட டாக்டரிடம் செல்ல தயங்காதே …”

 

 

“சதுர்!!! … சதுர்!! … எனக்கு வயிறு வலிக்கவில்லை. உங்கள் கேள்விகள் தான் என்னை மூச்சுத்திணறச் செய்கின்றன” என்று நகைத்தாள்.

 

 

“கேலி செய்யாதே. பதில் கூறு ”

 

 

அவள் நன்றாக இருப்பதாகக் கூறினாள். ஒரு பெரிய வரிசை பின்னே இருந்ததால் தயக்கத்துடன், அவர் ரிசீவரை வைத்தார்.

 

 

இரவு கடந்தது. அவர் தூங்கவில்லை. இரண்டு நாட்களாக அவர் போதுமான அளவிற்குத் தூங்கவில்லை மற்றும் அவரது மனதிற்கு ஓய்வு தேவைப்பட்டது.

 

 

அவர் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் யோசித்துக் கொண்டிருந்தார்:

 

“நீ ஏன் இங்கு வந்தாய்?’’ என்று சுதா யாரிடம் சொன்னாள்?

ஷ்ரவனா? அவர் வெளிநாட்டில் இருப்பதாய்க் கூறி அவரே திடீரென வந்திருக்கலாம்.

மைதிலியா? சுதா அவளை வெறுத்தாள். அதனால் அவள் அவளிடம் அப்படி கேட்டிருக்கலாம்.

நந்தினி? விநாயக்? அவர்கள் அவளை சந்தித்ததில்லை.

செம்பியன்? அவர் அவளை வெறுத்தார்.
காவலாளியா? அவர் தனது மனைவியுடன் இருந்திருக்க வேண்டும்.

சுதாவின் சொற்களின் காரணங்களை அறிய மூலையைக் கசிக்கினார். ஆனால், அவர் எந்தவொரு தீர்வையும் பெற முடியவில்லை. அவருடைய தலை வெடித்துவிடுவது போல் வலித்தது.

 

 

விமானம் புறப்பட்டவுடன் அவர் தூங்கிவிட்டார். ஒரு கனவு எட்டிப் பார்த்தது: அவரது மனைவி மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தாள். அவள் வலியால் கத்தினாள். சதுர் வெளியே காத்திருந்தார். பின்னர் ஒரு மனிதன் அறுவை சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்தான்.

 

 

ஓர் கத்தி அவன் கையில் இருந்தது. “டேய்! என் காயத்திரியை என்னடா பண்ண??” என்று வெறியோடு அலறினார். சதுர். கொலையாளி வெளியே ஓடினான். சதுர் துறத்தினார். ஒற்றைக் கையோடு ஆட்டோ காரன் வெளியே ஆட்டோவோடு தயாராக நின்றுக் கொண்டிருந்தான். கொலையாளி
உள்ளே ஏறி தப்பினான்.
பிறகு சதூர் ஒரு குழந்தை அழுவதைக் கேட்டார். அவர் தனது மனைவியைப் பார்க்க உள்ளே ஓடினார். ஆனால் அவர் வழுக்கி கீழே விழுந்தார்.

 

 

சதுர் சட்டென்று கண்விழித்தார். அவர் எழுந்த வேகத்தில் அருகே இருந்த பயணி பயந்துவிட்டார். சதுர் அவரைக் கண்டுகொள்ளவில்லை.

 

 

புவி ஈர்ப்பின் காரணம் அறிய முடியாத நியூட்டனைப் போல் விளக்கம் இன்றி தவித்தார் சதுர்: கொலை செய்யும் நேரத்தில் ஆட்டோ டிரைவர் ஏன் குறைந்த குடியேற்றம் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும்?

 
விமானம் தரையிறங்கியவுடன் சதுர் ஒரு வண்டியை வாடகைக்கு எடுத்து ஆட்டோ டிரைவரின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவன் இல்லை. ஆட்டோக்கள் நிற்கும் இடத்திலும் அவன் இல்லை.

 

 

“அவன் சவாரி ஒன்ன கூட்டிகினு போயிருக்கான் சார். அவன எதுக்குப் பாக்கனும்?” என்று மற்றொரு ஆட்டோ டிரைவர் கேட்டான்.
சதுர் வேறு வழியில்லாது காத்திருந்தார். அவரது மூளை வழக்கை விட்டு வெளியே வர முடியவில்லை. தேய்ந்துப் போன கேஸட்டைப்( Casette) போல் மீண்டும் மீண்டும் அதே துப்புகளும் படங்களும் அவர் தலையில் ஓடியது. ஆட்டோ டிரைவர் தவிர சுதாவின் வீட்டைச் சுற்றியுள்ள தெருக்களில் யாரும் இல்லை, வேறு வீடுகளும் இல்லை என்று மாதவி கூறியதை எண்ணிப் பார்த்தார் சதுர்.
பின்னர், மற்ற பணிமிகுதி இடங்களை விட்டு அங்கு ஏன் சென்றான்?

 

 

அவர் கால் மணி நேரமாக காத்திருந்தார். பிறகு ஆட்டோ காரன் வந்தான். சதுர் அவனை எலியிற்கு காத்திருந்த பூனையைப் போல் ஆவலோடு பார்தார்.

 

 

ஆனால் அவன் வந்ததும் சதுர் அதைக்காட்டிக் கொள்ளவில்லை.

 

 

“எங்கே போகனும், சார்?”என்று டிரைவர் கேட்டார்.

 

 

“நான் விசாரணைக்காக வந்திருக்கிறேன். ஏன் கொலை நடந்த இடத்திற்குச் சென்றாய்? ”

 

 

“ஐயா? எனக்குப் புரியலைங்க. ரெண்டு நாளுக்கு நான் உடல்நில சரியில்லாம இருந்தேன். நான் வேலைக்கு போகல. உங்களுக்கும் அது தெரியும்…”

 

 

“ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு மாதாவியை நீ அந்த இடத்திலிருந்து தானே அழைத்துச் சென்றாய் ?”

 

 

“அது தான் என் கடைசி சவாரியாக இருந்தது சார். அடுத்த ரெண்டு நாளில் நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன்” என்று
பயந்தவாறு கூறினான்.

 

 

“நான் அந்த நாள் பற்றி தான் கேட்கிறேன். நீ ஏன் அங்கு சென்றாய்? உன் வீடு அங்கே இல்லை. ஏன் சென்றாய்?? ”

 

 

“நான் ஒரு பயணிகூடப் போனேன்” என்று அவன் கூறினான் .

 

 

“யார் அது?”

 

 

“சார் எனக்கு எப்படி தெரியும்?”

 

 

“நீ விவரிக்க முடியுமா?”

 

 

அவன் விளக்க ஆரம்பித்தான். சதுர் அந்த நபரை அறிந்திருப்பதாய் உணர்ந்தார்.

 

 

டிரைவர் சீட்டில் பின்னால் அவர் கவனத்தை ஏதோ ஒன்று ஈர்த்தது. அந்த பயணி யார் என்று சதுர் கண்டுபிடித்தார்.

 

 

மர்மம் தொடரும்….

 

(படியுங்கள் ) அத்தியாயம் 10

மாலை மர்மங்கள் எங்கள் பிரத்தியேக குற்ற நாவல் தொடர். எழுதியோர் :  சுவாதி மோகன் , அனிருத் ரமேஷ் (ஆங்கிலம்) மற்றும் அருண் பாலாஜி , க. பவித்ரா , கிஷோர்  (தமிழ்)